பக்கம்:மதன கல்யாணி-1.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 257

விஷயம் கேட்க விரும்புகிறேன். நீ ஒவ்வொரு நாளும் ஏதாவது சமாசாரப் பத்திரிகை படிப்பது வழக்கமுண்டா” என்றார்.

அதைக் கேட்ட பாலாம்பாள், அவரது கருத்தை உணரமாட்டா மல் சிறிது திகைப்படைந்து, “பத்திரிகைகள் படிக்க எனக்கு சாவகாசமே இருக்கிறதில்லை. ஆகையால் நான் படிக்கிறதில்லை. ஏன்? எதற்காக அப்படிக் கேட்கிறீர்கள்?” என்றாள்.

உடனே சிவஞான முதலியார் தமது சட்டைப் பையில் இருந்த சுதேசமித்திரன் பத்திரிகையை எடுத்த வண்ணம், “இது இன்றைய சுதேசமித்திரன் பத்திரிகை. நேற்று இரவில் இங்கே கொள்ளை நடந்ததைப் பற்றிய விவரம் இதில் வெளியாகி இருக்கிறது. நீ பத்திரிகை படிப்பதில்லை என்று சொன்னதில் இருந்து, இதில் வந்துள்ள சங்கதியை நீ படித்திருக்க மாட்டாய் என்பது நிச்சயமாகத் தெரிகிறது. ஆகையால் நான் இதைப் படிக்கிறேன்; கேள்” என்று கூறிய வண்ணம் தமக்கு சிறிது துரத்தில் மாட்டப் பட்டிருந்த விளக்கிற்கு அருகில் பத்திரிகையை நீட்டி வைத்துக் கொண்டு படிக்க முயன்றார். அவரது மொழியைக் கேட்ட பாலாம் பாள் உண்மையில் வியப்படைந்து “என்ன ஆச்சரியம்! நேற்று நடந்த கொள்ளையைப் பற்றிய சங்கதியை இதற்குள் பத்திரிகையில் போட்டுவிட்டார்களா? எங்கே என்ன எழுதி இருக்கிறார்கள்? படியுங்கள்” என்று மிகுந்த ஆவலோடு கேட்க, சிவஞான முதலியார் பத்திரிகையில் இருந்த சமாசாரத்தை திரும்பவும் ஒரு முறை அடியில் கண்டபடி படிக்கலானார்:

பெருத்த கூட்டுக் கொள்ளை’ மூன்று படுகொலைகள் திருடர்களுள் ஒருவன் பிடிபட்டான்

ஆலந்துருக்கு அருகில், ராஜபாட்டையின் மேல் உள்ள மோகன விலாஸ் என்ற பங்களாவில் நேற்று இரவு மூன்று மணிக்கு ஒரு பெருத்த பயங்கரமான கூட்டுக் கொள்ளை நடந்ததாம். அவ்விடத்தில் பாலாம்பாள் என்ற ஓர் அழகிய பெண் இருந்து வருகிறாள். மைசூரிலிருந்து வந்துள்ள பாலிகா மனமோகன நாடகக் கம்பெனியில் உள்ள முக்கியமான பெண் வேஷக்காரி ம.க.i-18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/275&oldid=649785" இலிருந்து மீள்விக்கப்பட்டது