பக்கம்:மதன கல்யாணி-1.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 259

அவன் தேனாம்பேட்டையில் உள்ள யாரோ ஒரு ஜெமீந்தாரது வீட்டுப் பையன் என்று போலீஸார் சந்தேகித்து பல இடங்களிலும் விசாரித்து வருகிறார்கள். பாலாம்பாள் வாய் பேசும்படியான நிலைமைக்கு வந்தபிறகு, போலீஸார் அவளிடம் சரியான வாக்கு மூலமும் வாங்கப் போகிறார்கள்.

-என்று சிவஞான முதலியார் படித்து நிறுத்தினார். அந்த விவரங்களைக் கேட்ட பாலாம்பாள் ஒருவாறு இகழ்வுக்கும் பழிப்புக்கும் இடமில்லாதிருந்ததைக் கண்டு பெரிதும் மகிழ்ச்சி அடைந்தவளாய், மைனர் தன்னிடத்தில் நடந்து கொண்ட விவரத்தை அந்த சமாசாரத்திற்கு ஒத்தாற் போல தானும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தனக்குள் உடனே தீர்மானம் செய்து கொண்டவளாய், அவர்களது செவியில் படும்படியாக தனக்குத் தானே பேசலானாள், “ஒகோ அப்படியா சங்கதி! இப்போது தான் நன்றாகத் தெரிகிறது! அந்தப் பையனே இந்தத் திருடர்களை அழைத்து வந்திருப்பானோ என்று நானும் சந்தேகப்பட்டேன். அதுவே நிஜமாக முடிந்திருக்கிறது; சரி ஒழியட்டும்; துஷ்டனுக் கெல்லாம் இந்த கதிதான் வந்து சம்பவிக்கும்; அவன் தான் யார் என்ற விவரத்தை மறந்துவிட்டால், அதை நான் சொல்ல மாட்டேன் என்று நினைத்துக் கொண்டான் போலிருக்கிறது. சேவலின் தொண்டையைப் பிடித்து விட்டால் பொழுது விடியாமல் நின்று போய் விடும் என்று நினைப்பது போல இது இருக்கிறது. ஆனால் இதில் ஒரு விஷயம் மாத்திரம் தவறாக இருக்கிறது. என்னுடைய நகைகளும் பணங்களும் ஆடைகளும் சுமார் இரண்டு லட்சம் ரூபாய் பெறும்; ஆனால், இதில் ஐம்ப தாயிரம் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் என்னைக் கேட்காமல் வேலைக்காரிகளிடம் கேட்டு உத்தேசமாகப்

போட்டிருக்கிறார்கள் போலிருக்கிறது” என்று கூறி நிறுத்தினாள்.

அதைக் கேட்ட சிவஞான முதலியார் வக்கீல் ஆதலால், மைனர் திருடனோடு வந்ததைத் தான் கண்டதாக அவள் சொல்லாததில் இருந்து, மைனர் கொள்ளையில் கலந்தவன் என்பதற்கு நேரான சாட்சியமில்லை என்பதையும் ஏதோ சம்சயத்தின் மேலேயே, அவன் சம்பந்தப்படுத்தப் பட்டிருக்கிறான் என்பதையும் யூகித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/277&oldid=649789" இலிருந்து மீள்விக்கப்பட்டது