பக்கம்:மதன கல்யாணி-1.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#0 மதன கல்யாணி

இவ்வளவு பெரிய சமஸ்தானத்தின் அதிபதி ஆகப் போகிறவன் என்பதை அவள் கொஞ்சமும் நினைக்கிறதில்லை. இன்னம் ஒரு வருஷம் போனால் நான் மேஜர் ஆகிவிடுவேன்; எல்லாரையும் கண்ணில் விரல்விட்டு ஆட்டி விடுவேன். எனக்கு அம்மாள் ஒருத்தி, வேறே இரண்டு வக்கீல்கள் ஆகிய மூவரும் கார்டியனாக அமைந்திருக்கிறார்கள் என்பது உனக்குத் தெரிந்த சங்கதி. அம்மாளையாவது மிரட்டி ஏதாவது பணம் வாங்கி விடலாம். அந்த வக்கீல்கள் பரமலோபிகள். எனக்கு மாசம் ஒன்றுக்கு இரண்டா யிரம் ரூபாய் தான் கொடுப்போம் என்றும் அதற்கு மேல் ஒரு காசும் கொடுக்க மாட்டோம் என்றும் கண்டிப்பாகச் சொல்லி விட்டார்கள். இனிமேல் வேறே வழியில்லை. நீ சொன்னபடி நாட்டுக்கோட்டைச் செட்டிகளிடத்தில் பாதித் தொகை வாங்கிக் கொண்டு முழுத்தொகைக்குப் பத்திரம் எழுதிக் கொடுக்க வேண்டியது தான் வழி. இன்னம் ஒரு வருஷம் கழித்துப் பணத்தை வாங்கிக் கொள்ளட்டும் - என்றான்.

துரைராஜா:- அப்படியானால் அண்ணாமலை செட்டி என்று எனக்குத் தெரிந்தவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் இப்போதே போய் காரியத்தை முடிப்போம். எனக்கு இரண்டா யிரம் வேண்டும், உனக்கு எவ்வளவு வேண்டும்?

மைனர்:- எனக்கு மூவாயிரமாவது வேண்டும்.

துரைராஜா. சரி, மொத்தத்தில் ஐயாயிரம் வேண்டும். இரண்டு வட்டி போட்டு பதினாயிரத்துக்குப் பத்திரம் எழுதிக் கொடுத்தால், பணம் வந்துவிடும்.

மைனர்: போனால் போகிறது, அப்படியே எழுதிக் கொடுத்து விடுவோம். அந்த மாத்திரம் முடிப்பது போதாது. இன்னொரு முக்கியமான காரியம் இருக்கிறது. அதற்காகவே நான் சாப்பிட்ட உடனே இங்கே ஓடிவந்தேன். இல்லாவிட்டால், நேற்று ராத்திரி தூக்கம் இல்லாமல் இருந்ததற்கு இன்று பகல் முழுதும் துங்கி இருப்பேன். அந்த விஷயத்தை முடித்துக் கொடுப்பதும் உன்னுடைய பொறுப்பு நீ மனசு வைத்தால் அந்தக் காரியம் அவசியம் முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/28&oldid=649794" இலிருந்து மீள்விக்கப்பட்டது