பக்கம்:மதன கல்யாணி-1.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 265

உண்டான வேதனையாலும் என்னுடைய ஸ்மரணை தப்பிக் கொண்டிருந்தது. போலீஸார் வந்தது போலவும், மெத்தையின் கீழே ஒளிந்து கொண்டிருந்த யாரோ ஒருவரைப் பிடித்தது போலவும் எனக்கு ஒரு நினைவுண்டாகிறது; அதன் பிறகு என்ன நடந்த தென்பது எனக்கு சுத்தமாகத் தெரியாது. ஆனால், அந்த மைனரே திருடரை அழைத்து வந்து, ஒடமாட்டாமல் ஒளிந்திருந்து, கடைசியில் பிடிபட்டுப் போனார் என்பது இப்போது தான் நன்றாகத் தெரிகிறது” என்றாள். அவள் சொன்ன வரலாற்றைக் கேட்ட கல்யாணியம்மாளும் சிவஞான முதலியாரும், அதை உண்மை என்றே நம்பிவிட்டதன்றி, அங்கே நடந்த கொள்ளை கொலை முதலிய குற்றங்களில் மைனரும் சம்பந்தப்பட்டவன் என்று கோர்ட்டார் நம்பி மைனரை தண்டிக்கப் போதுமான ருஜூ இருப்பதைக் கண்டு, பெரிதும் கவலையும் அச்சமும் கொண்டவர் களாய், மேலே தாம் என்ன சொல்வதென்பதை அறியாமல் சிறிது மெளனமாக இருந்தனர். அவளை சரிப்படுத்தி தங்களது விருப்பத்திற்கு இணங்கும்படி செய்வது மிகவும் கடினமாகத் தோன்றியது. முதலில் தாம் அவளுக்கு அந்த சொற்ப விஷயத்தைக் கருதி அபாரமான தொகையான இரண்டு லட்சம் ரூபாயைக் கொடுக்க வேண்டுமே என்ற மலைப்பு அவ்விருவருக் கும் தோன்றியது; அவ்வளவு தொகையைக் கொடுக்க தாங்கள் இணங்கினாலும் அவள் தங்களது சொற்படி நடப்பாளோ என்ற சந்தேகமும் பெரிதாக எழுந்தது. என்றாலும், சிவஞான முதலியார் தமது மனோ தைரியத்தை விடாமல், மறுபடியும் அவளிடம் பேசத் தொடங்கி, “குழந்தாய்! நீ சொன்ன விவரத்தைக் கேட்க, நிரம்பவும் விசனமாக இருக்கிறது. மைனர் பெளரஷம் கூறிவிட்டுப் போனதற்கு ஒத்ததாக உடனே திருடர்களும் வந்துவிட்டதில் இருந்து, அவனே அவர்களை அழைத்து வந்தவன் என்று நீ நினைப்பது சகஜந்தான். நான் கச்சேரிகளில் இதைப் போல எத்தனையோ வழக்குகள் வருவதை அனுபவத்தில் பார்த்திருக் கிறேன். காக்கை உட்கார்ந்ததும் பனம் பழம் விழுந்ததும் ஒத்ததைப் போலவே இது நடந்திருக்கிறது. பையன் சொல்லிப் போனது உண்மையாக இருக்கலாம். ஆனால் திருடர்கள் வந்தது மாத்திரம் தற்செயலாக நடந்ததாகவே இருக்க வேண்டும். உன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/283&oldid=649801" இலிருந்து மீள்விக்கப்பட்டது