பக்கம்:மதன கல்யாணி-1.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 267

ஆகையால் நீங்கள் ஒரு காரியம் செய்தால் என்ன? என்னை சாட்சிக்கு அழைக்காமலே இந்தக் கேசை முடிவு செய்துவிடும்படி போலீஸாரிடத்தில் ஏற்பாடு செய்து கொள்ளக் கூடாதோ? நான் இதைப்பற்றி போலீஸார் மேல் எவ்வித நடவடிக்கையும் எடுத்துக் கொள்வதில்லை என்பதை உங்களுக்கு எழுதி வேண்டுமானாலும் கொடுக்கிறேன்” என்றாள்.

சிவஞான:- சரி, சரி, அதெப்படி முடியும்? உன்னுடைய சாட்சியைத் தவிர, இதில் வேறே சாட்சியமே கிடையாதே. கொள்ளை, கொலை முதலிய பல குற்றங்கள் நடந்திருப்பதாகப் பத்திரிகை மூலமாக வெளியாகி இருக்கிறது. அதற்கு ருஜூவாக உன்னுடைய பங்களாவில் பினங்களும் அகப்பட்டு டாக்டர் முதலியோர் கொலை நடந்திருப்பதாகத் தீர்மானம் செய்திருக்கிறார் கள். அப்படி இருக்க, உன்னுடைய சாட்டியமில்லாமல் இந்தக் கேஸை முடிக்கக் கோர்ட்டார் இணங்குவார்களா? அதைப் போலீஸார் ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள்; அவர்கள் ஒப்புக் கொண்டாலும், அவர்களுடைய உத்தியோகம் போவதுமன்றி இந்தக் கேஸாம் மறுபடி விசாரணைக்கு வந்துவிடும். ஆகையால் எப்படியும் நீ வாக்குமூலம் கொடுத்தே தீரவேண்டும். அப்படிக் கொடுப்பதில் சில முக்கியமான விஷயங்களை நீ மாற்றிச் சொன்னால், அதனால் நமக்கு அனுகூலம் உண்டாகிவிடும். இது வரையில் போலீசாரும் உன்னிடத்தில் எவ்வித வாக்குமூலமும் வாங்காமல் இருப்பதால், நீ இப்போது எப்படிச் சொன்னாலும், அவர்கள் அதைக் குறித்து உன்மேல் ஆயாசப்படவும் நியாய மில்லை - என்றார்.

பாலாம்பாள். அப்படியானால், என்னுடைய வாக்குமூலத்தை எப்படி மாற்றிக் கொள்ளச் சொல்லுகிறீர்கள்?

சிவஞான:- மைனர் இதற்கு முன் உனக்குப் பழக்கமானவன் என்றும், திருடர்கள் வந்ததற்கு முன்பாகவே அவன் விருந்தாளி யாக இங்கே வந்திருந்ததாகவும், திருடர்களுக்கும் அவனுக்கும் எவ்வித சந்பந்தமும் இல்லை என்றும் நீ சொல்லிவிட்டால், அவனை விட்டுவிடுவார்கள். இதைப்பற்றி உன்னையும் கோர்ட்டார் ஒன்றும் செய்ய முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/285&oldid=649805" இலிருந்து மீள்விக்கப்பட்டது