பக்கம்:மதன கல்யாணி-1.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் #1

துரைராஜா (புன்சிரிப்போடு), அது என்ன்ால் ஆகக் கூடியதாக இருந்தால், அடுத்த நொடியிலேயே செய்து விடுகிறேன். அது

என்ன காரியம்? சொல்.

மைனர்:- ஒகோ ஒன்றையும் அறியாதவன் போலக் கேட்கிறாயோ! அது இன்னதென்பது உனக்குத் தெரியாதோ?

துரைராஜா:- தெரியவில்லையே.

மைனர்:- பெருத்த பெருத்த கைகளை எல்லாம் பார்த்த உனக்கு இது ஒர் அரிய விஷயமல்ல. நேற்று ராத்திரி மோகனாங்கி பாடிக் கொண்டு பார்சீ டான்ஸ் ஆடியதைக்கண்ட முதல் என் மனம் அப்படியே தவித்து டான்ஸ் ஆடிக்கொண்டே இருக்கிறது. தேகம் கொதித்துக் கட்டுக்கடங்காமல் பதறி நிற்கிறது. நான் படும் வாதையைக் கொஞ்சமும் சகிக்கவே முடியவில்லை. இதனால் உயிர் போனாலும் சரி; என்னுடைய சொத்தெல்லாம் ஒழிந்தாலும் கவலை இல்லை. எப்படியாவது அந்தப் பெண்ணரசியிடம் ஒரு பேச்சாவது பேசினால் போதும். அவளோடு தனிமையில் பேசும் படியாக, நீ பழக்கம் செய்து வைத்துவிட வேண்டும். நீ மனசு வைத்தால், இது ஒரு பெரிய காரியமல்ல - என்றான்.

துரைராஜா:- (ஆசியமாக) சரி; சரி, நல்ல வேலை தான். இது கண்மணிக்குத் தெரிந்தால், அவள் என்ன சொல்வாள் தெரியுமா? அவளுடைய சொந்த தமயனாகிய நானே, மாப்பிள்ளைக்கும் கூத்தாடிச்சிக்கும் சிநேகம் செய்து வைக்கிறதென்றால், அவளும் அத்தையம்மாளும் என்ன செய்வார்கள் தெரியுமா? என்னை உடனே பங்களவைவிட்டு துரத்திவிடுவார்கள் - என்றான்.

மைனர்:- (புன்சிரிப்பாக) துரத்தி விட்டால் நல்லதாகிவிட்டது. என்னுடைய பங்களாவுக்கு வந்துவிடு. முதலில் இந்தச் சங்கதி அவர்களுக்குத் தெரியவே போகிறதில்லை. தெரிந்தாலும், அதனால் குற்றமும் இல்லை. நான் மேஜர் ஆக இன்னம் ஒருவருஷ காலத்துக்கு மேல் இருக்கிறது. அதன் பிறகே எனக்குக் கலியாணம் செய்ய வேண்டும் என்று என் தகப்பனாருடைய மரணசாசனத்தில் எழுதி வைத்திருக்கிறார். ஒன்றரை வருஷத்துக்குப் பிறகு கண்மணியை அடைவதை நினைத்து இப்போது முதல் நான் சந்நியாசியாக இருந்து தபசு பண்ண வேண்டுமோ? - என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/29&oldid=649813" இலிருந்து மீள்விக்கப்பட்டது