பக்கம்:மதன கல்யாணி-1.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 273

அந்தப் பத்திரம் மைனரது கையினாலேயே எழுதப்பட்டது என்பதை அவர்கள் நிச்சயமாக உணர்ந்து கொண்டனர். மைனர் அவளைக் கலியாணம் செய்யக் கூடாமல் இருந்த நிலைமையில் அவளைப் பட்டமகிஷியாக ஆக்க இணங்கியதில் இருந்து அவள் மீது அவன் கொண்டுள்ள காமாந்தகாரம் எவ்வளவு அதிகமான தென்பது சந்தேகமற விளங்கியது ஆகையால், அவள் அதற்கு இனங்காதது பற்றி அவன் பலாத்காரமாக அவளைக் கொண்டு போக முயன்றிருப்பான் என்பதும் நிச்சயமாக ஏற்பட்டது. சிவஞான முதலியாரது மனதில் உடனே ஓர் எண்ணம் உதித்தது. அந்தப் பத்திரத்தை பாலாம்பாள் மாஜிஸ்டிரேட்டின் கோர்ட்டில் பதிவு செய்தால் அந்தக் கொள்ளைக்கும் கொலைக்கும் மைனரே காரணகர்த்தா என்பது ரு.ஜூவாகிவிடும் ஆதலால், எப்படியாவது தந்திரம் செய்து அந்தப் பத்திரத்தை பாலாம்பாளிடம் கொடாமல், தாங்கள் கொண்டு போவது நல்லதென்று நினைத்தார். ஆனால், கல்யாணியம்மாளது மனதிலோ வேறே விதமான அச்சம் தோன்றியது. தாங்கள் பத்திரத்தை அவளிடம் திருப்பிக் கொடாமல் அப்போதே கிழித்து எறிந்தாலும், அல்லது, வேறே வகையில் தந்திரம் செய்து அதைக் கொண்டு போய்விட்டாலும், பாலாம்பாள் தங்கள் மீது பகைமை கொண்டு, பையனும் கொள்ளைக்காரர் களோடு வந்து கொள்ளை கொலை முதலியவற்றைச் செய்தான் என்று தனது வாக்குமூலத்தை அவள் மாற்றிக் கொண்டால், பையனது காரியம் முன்னிலும் அதிகமாகக் கெட்டுப் போய் விடும் என்று நினைத்தவளாய், பத்திரத்தை அவளிடம் கொடுத்துவிட நினைத்து, சிவஞான முதலியாரிடத்தில் இருந்து அதை வாங்கி, பாலாம்பாளிடம் திருப்பிக் கொடுத்து விட்டாள். அவர்கள் அதைத் திருப்பிக் கொடுக்காமல், ஏதாவது மோசம் செய்துவிடுவார்களே என்ற ஐயம் பாலாம்பாளது மனத்திலும் உண்டானது ஆனாலும் மைனரது உயிரும் அவர்களது மானமும் தனது கையில் இருப்பது பற்றி, அவர்கள் எவ்வித மோசமும் செய்ய மாட்டார்கள் என்ற துணிவினால், அவள் பத்திரத்தை அவர்களிடம் அலட்சியமாகக் கொடுத்தாள். அவளது நினைவின்படியே கல்யாணியம்மாளும் அதைத் திரும்பவும் அவளிடம் கொடுத்து விடவே, அதை ம.க.!-19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/291&oldid=649817" இலிருந்து மீள்விக்கப்பட்டது