பக்கம்:மதன கல்யாணி-1.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 மதன கல்யாணி

வாங்கிக் கொண்ட பாலாம்பாள், “பார்த்தீர்கள் அல்லவா? இந்தப் பத்திரம் அவருடைய கையெழுத்து தானே?” என்றாள்.

கல்யாணி:- ஆம்; அவனுடைய எழுத்தைப் போல் தான் இருக்கிறது. இல்லாவிட்டால், நீ பொய் சொல்லவா போகிறாய்?

பாலாம்பாள்:- அவர் என்மேல் அபாரமான பிரியம் வைத்திருக்கி றார் என்பது இதிலிருந்து நன்றாகத் தெரிகிறது. அவரோ சிறுபிள்ளை; பெரிய சமஸ்தானத்தின் அதிபதியாகப் போகிறவர்; என்னை பட்டமகிஷியாக ஒப்புக் கொள்ளவும் கட்டுப்படுகிறார். அப்படி ஒப்புக்கொள்ளாவிட்டால், ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கொடுப்பதாக எழுதிக் கொடுத்திருக்கிறார். இத்தனை பெருத்த நன்மைகளையும், நான் எதனால் மதிக்கவில்லை. இப்போது என்னைக் கலியாணம் செய்து கொள்வதாக இருப்பவர் நிரம்பவும் வயதானவர். அவருடைய சொத்தெல்லாம் சேர்ந்தால், நாலைந்து லட்சத்துக்கு இருக்கும். அப்படி இருந்தும், நான் ஏன் இந்த மைனருடைய ஏற்பாடுகளை அலட்சியம் செய்தேன் என்றால், வீட்டில் உள்ள பெரியவர்களுக்குத் தெரியாமலும் ஒழுங்கான கலியாணம் இல்லாமலும் திருட்டுத்தனமாக அவருக்கு சம்சாரமாக இருக்க என் மனம் ஒப்பவில்லை. அதுவே முக்கியமான காரணம். இதனால் மானஹானியும், வழக்குகளும், வியாஜ்ஜியங்களுமே எனக்கு வந்து நேருமல்லாது, உண்மையான பெருமையும் சந்தோஷமும் ஏற்படப் போவதில்லை அல்லவா - என்றாள்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாள் சிறிது துணிவடைந்தாள். ஏனெனில், அதுகாறும் சிறிதும் பிடிகொடாமல் பேசிய பாலாம் பாள் அப்போது தனது முறுக்கை சிறிதளவு தளர்த்தியதைக் காணவே, கல்யாணியம்மாள் மேலும் பேசத்தொடங்கி, “எப்படி யாவது ஒரு யோசனை செய்து, நீதான் எங்களுடைய மானத்தைக் காப்பாற்ற வேண்டும். உங்களைப் பார்க்கும் போதே நீ மகா உத்தமி என்பது நன்றாகத் தெரிகிறது. நீ எப்படிப்பட்ட பெருத்த நிதியையும் ஒரு திரணமாக நினைத்து, மானத்தையே முதன்மை யானதாக மதிக்கிறவள் என்பதற்கு இதைத் தவிர வேறே ருஜூவே தேவையில்லை. அப்படி இருப்பதால், உன்னிடம் தாறுமாறான ஏற்பாடுகளைப் பேச எனக்கு மனம் துணியவில்லை. நீ மாத்திரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/292&oldid=649819" இலிருந்து மீள்விக்கப்பட்டது