பக்கம்:மதன கல்யாணி-1.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 மதனகல்யாணி

பார்க்கப் பார்க்க, மைனர் விஷயத்திலும் எனக்குப் பெருத்த இரக்கமும் விசனமும் உண்டாகின்றன; என்னிடம் அவர் வைத்திருக்கும் பிரேமைக்கும் காதலுக்கும் கைம்மாறாக நான் அவருக்கு விரோதமாக கோர்ட்டில் வாக்குமூலம் கொடுத்து, அவரைக் கடுமையான தண்டனைக்கு ஆளாக்க வேண்டி இருக்கிறதே என்பது தான் என் மனதிலும் ஒரு புறத்தில் அறுத்துக் கொண்டே இருக்கிறது. நீங்கள் இவ்வளவு தூரம் கேட்டுக் கொள் வதைக் கருதி, என்னாலான உதவியை நான் செய்யத் தடை இல்லை. நீங்களே ஒரு யோசனை சொல்லுங்கள்; நான் அப்படியே செய்கிறேன். ஆனால், முன்னே நீங்கள் பிரஸ்தாபித்த படி, என்னுடைய கற்பைப்பற்றி பிறர் சந்தேகிக்கும்படியாக, நான் கோர்ட்டில் நடந்து கொள்ளாமல் வேறே விதத்தில் ஏதாவது யோசனை சொல்லுங்கள். அதன்படி செய்கிறேன்” என்றாள். அதைக் கேட்ட கல்யாணியம்மாள் சிந்தனையில் ஆழ்ந்தாள். மைனரால் எழுதிக் கொடுக்கப்பட்ட பத்திரத்தை பாலாம்பாள் ஒப்புக் கொண்டு, அதன்படி மைனருக்கு வைப்பாக அவள் இருக்க விரும்பினால், அதன் பொருட்டு கடைசியில் மைனர் அவளுக்கு ஜீவனாம்சமோ, அல்லது, நஷ்டஈடோ கொடுக்க நேருமன்றி, சட்டப்படி அவள் பட்டமகிஷி ஆகமாட்டாள் என்று கல்யாணியம்மாள் அபிப்பிராயப்பட்டாள். தவிர, மைனருக்குக் கல்யாணம் செய்து வைக்க உத்தேசப்பட்டிருப்பவளான கண்மணியம்மாளை மிகவும் நன்றாகத் தண்டிக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கல்யாணியம்மாள் மிகவும் பிடிவாதமாகக் கொண்டிருந்தவள் ஆதலால், பாலாம்பாளை மைனருக்கு வைப்பாட்டியாக, தானே ஏற்பாடு செய்து வைத்துவிட்டால், அதனால் பல விஷயங்கள் அனுகூலமாக முடிந்து விடும் என்று அந்த அம்மாள் எண்ணினாள். முதலில் மைனர் விடுதலை அடைந்து விடுவான்; அதனால், தனக்கு ஏற்படவிருக்கும் மானஹானியும் துன்பங்களும் நிவர்த்தியாகிவிடும்; மைனர், தான் நாடகப் பெண் விஷயத்தில் கொண்ட விருப்பத்தை, தனது தாயே பூர்த்தி செய்து வைத்தாள் என்று நினைத்து இனியாகிலும் தனது சொற்படி நடந்து கொள்வான். இவைகளைவிட அதிக முக்கியமான இன்னொரு பலன், மைனரை மணக்கப் போகும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/294&oldid=649822" இலிருந்து மீள்விக்கப்பட்டது