பக்கம்:மதன கல்யாணி-1.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 281

முடியாது. நீ இந்த ஒரு விஷயத்தை முடிவுகட்டுவதற்கு இவ்வளவு சங்கடப்படுகிறாயே! நியாயஸ்தலங்களில் ஒவ்வொரு நாளும் எத்தனையோ வழக்குகளும் வியாஜ்ஜியங்களும் வந்து வாதாடப் படுகின்றன. சில வழக்குகளில் வாதி சொல்வதும் நியாயமாக இருக்கிறது; பிரதிவாதி சொல்வதும் நியாயமாக இருக்கிறது. அப்படிப்பட்ட வழக்குகளில் நியாயாதிபதி எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது தெரியுமா! அந்த மாதிரி எத்தனையோ தரும சங்கடமான வழக்குகள் ஒரு நாளில் முடிவடைகின்றன. இரண்டு கட்சிகளுக்கும் நியாயாதிபதி அனுகூலம் செய்ய எப்படி முடியும்? ஏதாவது ஒரு கட்சிக்குத்தானே அனுகூலம் கிடைக்கும்; அதைப் போல நீயும் ஏதாவது ஒருவருக்குத் தான் அனுகூலம் செய்ய வேண்டும். ஆனால், எவருக்கு அனுகூலம் செய்கிறதென் பதை எப்படித் தீர்மானிக்கிறது என்றல்லவா என்னைக் கேட்டாய்? அதற்கு ஒரு யோசனை சொல்லுகிறேன். அதை நீ நன்றாக கவனிக்க வேண்டும். என்னவென்றால், நீ இப்போது, உன்னுடைய பழைய நண்பரையே கலியாணம் செய்து கொள்ளத் தீர்மானிப்பதாக வைத்துக் கொள்வோம்; அப்போது எங்களுக்கு நேரும் துன்பம் என்னவென்றால், மைனர் மரண தண்டனையோ, தீவாந்தர தண்டனையோ, அல்லது, சிறைச்சாலை தண்டனையோ அடைவது நிச்சயம். அதனால், அவனுக்கும், அவனுடைய தாயார், கலியாணம் ஆகாத இரண்டு சகோதரிமார் முதலியோருக்கும் என்றைக்கும் நீங்காத அவமானமும், தலை குனிவும் ஏற்படும். அவன் சிறைச்சாலையில் இருந்து திரும்பி வந்தால், அவனுக்குத் தக்க இடத்தில் கலியாணம் நடப்பதே சந்தேகமாகிவிடும். அதனால் பலவகையான துன்பங்கள் ஏற்படும். அப்படியின்றி, நீ எங்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கி, இந்த அம்மாளுக்கு மருமகளாக வர இசைந்தால், உடனே மைனர் விடுதலை அடைந்து விடுவான்; அவனுடைய குடும்பத்தாருக்கு எவ்வித துன்பமும் துயரமும் இல்லாமல் போகின்றன. ஆனால் உன்னுடைய பழைய சிநேகிதருக்கு என்ன நஷ்டம் என்பதை கவனிப்போம். தாம் ஆசைப்பட்ட பெண் தமக்குக் கிடைக்க வில்லையே என்ற விசனம் அவருக்கு உண்டாகும்; அதைப் பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/299&oldid=649831" இலிருந்து மீள்விக்கப்பட்டது