பக்கம்:மதன கல்யாணி-1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மதன கல்யாணி

அதைக் கேட்ட துரைராஜா, ‘இல்லை மாப்பிள்ளை! நான் விளையாட்டுக்குச் சொன்னேன். ஆண்பிள்ளை என்றால் ஆயிரம் ரகசியம் இருக்கும். இதென்ன துவாபரயுகமா? அந்த யுகத்திலேயே ராமர் ஒருவர் தானே ஏகபத்ணி விரதராய் இருந்தார். மற்றவர் இராவணனைப் போலத்தானே இருந்தார்கள். இந்தக் காலத்தில் கட்டுப்பாட்டில் நிற்கும்படி யாராவது சொன்னால் புருஷர்கள் கேட்பார்களா? அது இல்லை. அதிலும் இந்த மோகனாங்கியைக் கண்டால் யாருக்குத்தான் மனம் கலங்காது. அந்த ராமரே இவளைப் பார்த்திருந்தால், அவருடைய ஏகடத்ணி விரதம் எல்லாம் பஞ்சாகப் பறந்து போயிருக்காதா முதலில், நேற்று முதல் என் மனம் படும் பாட்டை நான் என்னவென்று சொல்லப் போகிறேன். முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போல நான் இன்று பகல் முழுதும் இன்பக் கனவு கண்டு கொண்டே தூங்கினேன். இந்த விஷயங்களில் அதிகமாக உழன்ற என் நிலைமையே இப்படி இருந்தால், அவ்வளவு அனுபோகம் இல்லாத உன்னைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? இந்த விஷயத்தில் எனக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை. ஆனால் நம்முடைய ஆசை பலிக்க வேண்டுமே. அதுதான் யோசனையாக இருக்கிறது. அவள் சீனத்துச் சரக்காய் இருக்கிறாளே முதலில், அவள் எங்கே இருக்கிறாள் என்பதை வெளியில் தெரியாமல் அல்லவா மறைந்து கொண்டிருக் கிறாள். நாடகக் கம்பெனியின் எஜமானனுக்கும், அதன் மானே ஜருக்கும் அவள் இருக்கும் இடம் தெரியுமாம். அவர்கள் உயிர் போவதானாலும் அதை வெளியிடமாட்டார்கள். அவளுடைய இருப்பிடத்தை முதலில் கண்டுபிடிக்க நாம் வழிதேட வேண்டும்.”

மைனர்- அதை எளிதில் கண்டுபிடித்து விடலாம். அவள் ராத்திரியில் நாடகம் முடிந்த பிறகு ஏதாவது ஒரு வண்டியில் ஏறிக் கொண்டு தானே தன்னுடைய வீட்டுக்குப் போவாள். பைசைக்கில் வண்டியோடு ஒர் ஆளைத் தயாராக வைத்திருந்து, வண்டியைத் தொடர்ந்து போகும்படி செய்தால், அவள் இறங்கும் இடத்தை அவன் கண்டுபிடித்துக் கொள்ளுகிறான்.

துரைராஜா:- அது நல்ல யோசனை தான். அப்படியே செய்து விடலாம். என்னுடைய தவசிப்பிள்ளை பொன்னம்பலத்தை இரந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/30&oldid=649835" இலிருந்து மீள்விக்கப்பட்டது