பக்கம்:மதன கல்யாணி-1.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 மதன கல்யாணி

கல்யாணி:- எங்களுடைய பிள்ளைக்கு வேறோர் இடத்தில் பெண் பார்த்திருக்கிறோம். திடீரென்று அந்தச் சம்பந்தத்தை வேண்டாம் என்று சொல்லுவது சந்தேகத்துக்கு இடமாகும். ஆகையால் சிறுகச் சிறுக அதை ஒருவகையாகப் பங்கீடு செய்ய வேண்டும். அதன் பிறகு, நம்முடைய பங்களாவுக்கே வந்து விடலாம். அது வரைக்கும், உனக்கு வேறே தனியான நல்ல ஜாகை அமர்த்திக் கொடுக்கச் செய்கிறேன். அதில் சொற்ப காலம் நீயும் மைனரும் சந்தோஷமாக இருங்கள்.

பாலாம்பாள்:- ஆம்; அதுதான் நியாயம்; அப்படியே செய்கிறேன் - என்றாள். அதைக் கேட்ட கல்யாணியம்மாள் தனக்குள்ளாகவே பெரிதும் மகிழ்ச்சியடைந்தாள். ஏனெனில், அவள் தன்னை தங்களோடு தேனாம்பேட்டை பங்களாவுக்கு உடனே அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பாளோ என்றும், அந்த வெட்கக்கேட்டைத் தனது பெண்களும், மற்றவரும் அறிந்து கொள்வார்களே என்றும் அவள் பெரிதும் அஞ்சியிருந்தாள் ஆதலால், முக்கியமான அந்தக் கவலை நீங்கியது. அதன் பிறகு சிவஞான முதலியார் பாலாம்பாளை நோக்கி, “உன்னைச் சந்தோஷமாகவும் வசதியாகவும் வைக்க வேண்டிய பொறுப்பு இனி எங்களுடையது; இப்போது நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் மைனரைப் போலீஸாரிடத்தில் இருந்து விடுவிப்பதல்லவா? அதை எப்படி செய்யலாம்? சப் இன்ஸ்பெக்டர் இப்போதும் கச்சேரியில் இருக்கிறார். நான் போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். ஆனால், நான் பையனுக்குச் சம்பந்தமானவன் என்பதைச் சொல்லவில்லை. உன்னுடைய உடம்பு இன்னமும் குணப்படவில்லை என்று அவர் தெரிந்து கொண்டிருப்பதால், நாளைக்குக் காலையில் அவர் வாக்குமூலம் வாங்க இங்கே வருவார். இப்போது நீ நேரிலாவது ஆள் மூலமாக வாவது, மைனரைப் பற்றிய செய்தியை நீ அவரிடம் தெரிவித்தால், அவர் ஒருவேளை சந்தேகப்படலாம். ஆகையால் நாம் காலை வரையில் பொறுத்திருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. நாங்கள் இப்போது எங்களுடைய பங்களாவுக்குப் போய் விட்டுக் காலை 10 மணிக்கு இங்கே வருகிறோம்; அதற்குள் சப் இன்ஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/304&oldid=649844" இலிருந்து மீள்விக்கப்பட்டது