பக்கம்:மதன கல்யாணி-1.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 289

ராஜபாட்டையை அடைந்து, சென்னையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது; லாந்தரோடு வந்த வேலைக்காரன் திரும்பவும் கதவை மூடிப் பூட்டிக் கொண்டு பங்களாவிற்குள் போய்விட்டான்.

அப்போது இரவு சுமார் பதினொன்றரை மணிக்கு மேல் ஆகியிருக்கலாம். அன்று இரவு சாதாரண இருளாக இருந்தமை யாலும், ஆகாயத்தில் எண்ணிறந்த நட்சத்திரங்கள் பிரகாசித்துக் கொண்டிருந்தமையாலும், வழியும், மரங்களும், வயல்களும் நன்றாகத் தெரிந்தன. பெட்டி வண்டியின் முன்னும் பின்னும் நான்கு லாந்தர்கள் பொருத்தப் பட்டிருந்தன ஆதலால், வண்டியைச் சுற்றி, நாலைந்து கஜ தூரம் வரையில், வெளிச்சம் நன்றாகப் பரவி இருந்தது. நடு இரவாகிவிட்டதைக் கருதி சிவஞான முதலியார், வண்டியை விசையாக ஒட்டும்படி சொல்ல, வண்டிக் காரன் தனது சவுக்கை மிகவும் தாராளமாக உபயோகிக்கத் தலைப் பட்டான். அவன் சற்றேறக்குறைய நாற்பது வயதடைந்த முரட்டு மனிதன் ஆதலால், அவனது அடிகள் குதிரைக்குச் சகிக்க இயலாது போகவே, அது நாற்கால் பாய்ச்சலில் பிடுங்கிக் கொண்டு பறக்க ஆரம்பித்தது. அந்த அதிர்ச்சியும், அலட்டலையும் தாங்க மாட்டாமல் கல்யாணியம்மாள் பெரிதும் வருந்தினளேனும், நடு இரவில் தாங்கள் நிருமானுஷ்யமான பாதையில் போவதைக் கருதி அத்தனை துன்பங்களையும் பொறுத்துக் கொண்டிருந்தாள். வண்டி கிடுகிடாயமாகச் சென்று கொண்டே இருந்தது. அன்றைய சம்பவங்களைக் குறித்தும், தாங்கள் பத்திரத்தில் கையெழுத்துச் செய்த விஷயங்களைக் குறித்தும், அவர்கள் ஒருவரோடு ஒருவர் தங்களது எண்ணங்களை வெளியிட விரும்பினார்கள் ஆனாலும், தாங்கள் பேசும் சங்கதிகள் வண்டிக்காரனது செவிக்கு எட்டி விடுமோ என்ற நினைவினால் அஞ்சி அந்த விஷயங்களைப் பற்றியே பேச்ாமல், மெதுவான குரலில், அந்தப் பாதையைப் பற்றியும், மரங்களைப் பற்றியும், அதிக இருள் இல்லாதிருந்ததைப் பற்றியும், அப்போதைக்கப்போது லோகாபிராமமாகப் பேசிக் கொண்டிருந்தனர்; பெட்டி வண்டி, கிண்டி ரயில்வே ஸ்டேஷனைக் கடந்து சைதாப்பேட்டை தாலுக்காக் கச்சேரி அடையாற்றுப் பாலம் முதலியவற்றைக் கடந்து மவுண்டு ரோட்டின் வழியாகச் சென்றது. ம.க.1-20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/307&oldid=649849" இலிருந்து மீள்விக்கப்பட்டது