பக்கம்:மதன கல்யாணி-1.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 291

முதலியாரும், கல்யாணியம்மாளும் கலகலத்துப் போய், உடனே கீழே இறங்கி விட்டனர். அவர்களது உடம்பு முழுதும் வியர்வை வெள்ளத்தால் அபிஷேகமாகி விட்டது. கால்கள் பூமியில் நிற்க மாட்டாமல் நடுங்குகின்றன. தங்கள் மீது அடி வீழ்ந்து விடுமோ என்ற பெரும் பீதியினால், அவர்கள் இருவரும் தங்களது ஆடை ஆபரணங்களை எல்லாம் கழற்றிக் கொடுக்கலாயினர். சிவஞான முதலியாரது தங்க மூக்குக் கண்ணாடி முதல், கால் ஜோடு வரையில் உள்ள சகல பொருட்களும் பிரயாணம் புறப்பட்டுவிட்டன. அவர்மீது ஒரு கோவணம் ஒன்றே செயற்கைப் பொருள் மிஞ்சியது. அதைப்போல, கல்யாணியம்மாள் கொண்டு வந்திருந்த சுமார் ஐம்பதினாயிரம் ரூபாய் பெறுமான நோட்டுகளும், அவளது தேகத்தில் இருந்த அபாரமான விலையுள்ள வைர ஆபரணங்களும் ஆகிய சகலமானவற்றையும் அவள் கொடுக்கும்படி ஆகிவிட்டது. அவளது வில்ை உயர்ந்த பட்டுச் சேலையையும் விட்டுவிட மனமற்ற திருடர்கள் சிவஞான முதலியாரிடத்தில் இருந்து பறித்த வஸ்திரம் ஒன்றை அவளுக்குக் கொடுத்து அணியச் செய்து, சேலையையும் பிடுங்கிக் கொண்டனர். அவ்வாறு, அவர்கள் இருவரும் மரங்களைப் போல பிறந்த மேனியாக நிறுத்தப்பட்ட பின்னர், திருடர்கள் வண்டிக்குள் ஏறி, அங்கே ஏதேனும் பொருளை அவர்கள் போட்டிருப்பார்கள் என்ற நினைவினால் தேட, அங்கே ஒரு காகிதம் கிடக்கக் கண்டனர். அது பாலாம்பாளால் எழுதிக் கொடுக்கப்பட்ட காகிதம் ஆதலால், அதை மாத்திரம் காப்பாற்றும்படி சிவஞான முதலியார் அதை உள்ளே போட்டிருந். தார். அது ஏதேனும் முக்கியமான தஸ்தாவேஜாக இருக்கும் என்றும், அதனால் தங்களுக்குப் பெருத்த ஆதாயம் ஏற்படலாம் என்றும் நினைத்த திருடர்கள் அந்தக் கடிதத்தையும் எடுத்துக் கொண்டு கீழே இறங்கினார்கள்; சிவஞான முதலியார் கல்யாணி யம்மாள் ஆகிய இருவரிடத்திலும் அபகரித்த பொருட்கள் யாவும்

தரையில் தாறுமாறாகக் கிடந்தமையால் இரண்டு திருடர்கள் லாந்தரையும், கைத்தடிகளையும், தரையில் வைத்துவிட்டு, ஒரு துணியை விரித்துக் கீழே கிடந்த நோட்டுகள், கடிதம், ஆபரணங்கள், எல்லாப் பொருட்களையும் எடுத்து மூட்டையாகக்

கட்டினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/309&oldid=649853" இலிருந்து மீள்விக்கப்பட்டது