பக்கம்:மதன கல்யாணி-1.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 295

நிச்சயதாம்பூல முகூர்த்தத்தை மறுநாள் இரவில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு, அந்த மங்கையை விவரிக்க இயலாத வேதனைகளுக்கு இலக்காக்கி, மீனாகூஜியம்மாளை அழைத்துக் கொண்டு தனது பந்துக்களும் நட்பினருமான பலரது பங்களாக்களுக்கும் சென்ற காலத்தில் தனிமையில் விடப்பட்ட கண்மணியம்மாளை நாம் சிறிது கவனிப்பது அவசியமாகிறது. அந்த அழகிய மடந்தையின் முகமாறுதல்களையும் துயரத்தையும் தத்தளிப்பதையும் கண்டு, அவள் மதனகோபாலன் மீது காதல் கொண்டிருக்கிறாள் என்று கல்யாணியம்மாள் செய்த யூகம் தவறானதல்ல. ஏனெனில், ஒப்புயர்வற்றதான் மனோகர வடிவத்தையும், கபடமற்ற தயாள மனத்தையும், இனிய கலியான குணங்களையும், குளிர்ந்த நளின மொழிகளையும், அபாரமான சங்கீத ஞானப் பயிற்சியையும் பரிபூரணமாகப் பெற்றிருந்த அந்த அற்புத மோகனாங்கனான மதனகோபால னிடம் சிறிது நேரமாகிலும் பழகுவோர், ஆண்பாலரானாலும் பெண்பாலரானாலும், அவனால் கவரப்பட்டு, அவனிடம் வாத்சல்யம் கொண்டே தீரவேண்டும். அவனது இனிய சுந்தர வடிவத்தை, அவனுக்குத் தெரியாமலே தங்களது மனத்தில் பதிய வைத்துக் கொண்டு, இரவு பகலாக அவனை நினைத்து ஏங்கி, ரகசியத்தில் நெடுமூச்செறிந்து உயிர் சோர்ந்த பெண்டீர் கணக்கில் அடங்காதவர். அவ்வாறே அவனது தெய்வீக அமைப்பைக் கண்டு அவனது சிறப்புகளுள் ஒன்றேனும் தங்களிடத்தில் இல்லையே என்று நினைத்துப் பொறாமையால் வயிறு வெடிக்கும் நிலைமையை அடைந்த ஆண்பாலரது தொகை அனந்தம். அங்ஙனம் இருக்க, ஒத்த அழகும், ஒத்த குணமும், ஒத்த மனப்போக்கும் பெற்றவளான கண்மணியம்மாளது மனதில் அவனது விஷயத்தில் வாத்சல்யமும் பிரேமையும் ஏற்பட்டது விந்தையாகுமா? ஒருகாலும் ஆகாது. ஆனால், அவன் அன்னிய புருஷரிடத்திலும், ஸ்திரீகளிடத்திலும், மகா அடக்க வொடுக்கமாக வும் மரியாதை தவறாமலும் நடந்து, மனதாலும் சொல்லாலும் செயலாலும் எவ்விதமான தீமையும் கருதாமல் பரம யோக்கிய னாக நடந்து வந்தான் ஆதலால், அவனைக் கண்ட மாதர்கள் அவன் மீது மோகங் கொண்டது அவனது நடத்தைத் தவறினால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/312&oldid=649859" இலிருந்து மீள்விக்கப்பட்டது