பக்கம்:மதன கல்யாணி-1.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 மதன கல்யாணி

ஏற்பட்டதாகுமோ என்று எவரும் நினைப்பது உண்மைக்கு மாறான விஷயமாகும். அவனது அற்புத அமைப்பும் இயற்கை யான நற்குணங்களுமே விலக்க ஒண்ணா மோகனாஸ்திரங்களாகப் பொலிந்து, காண்டோரது மனதை அவ்வாறு கவர்ந்தன. காந்தங்கள் சிறிதும் முயற்சி செய்யாமல் இருக்க, இரும்புகள் எப்படித் தாமாகவே அவைகளிடம் செல்கின்றனவோ அப்படியே, மதன கோபாலன் தனது முயற்சியின்றியே பிறரது மனதை வசீகரிக்கக் கூடிய உத்தம புருஷனாக இருந்தான். செளந்தரியத்திலும், நற்குண நல்லொழுக்கத்திலும், மிருதுவான அழகிய சொற்களிலும், அவனது சங்கீத வித்தையிலும் ஈடுபட்டு மாறாவகையில் லயித்து விட்டது ஆதலால், அவள், தான் மணப்பதானால், அந்தப் புருஷனையே மணக்க வேண்டும் என்றும், இல்லையானால் தான் தனது உயிரையே மாய்த்துக் கொள்ள வேண்டும் என்றும், தனக்குள்ளாக உறுதி செய்து கொண்டிருந்தாள். அவளது கருத்தை ஒருவாறு உணர்ந்து கொண்ட மீனாகூஜியம்மாள் நயத்தினாலும், பயத்தினாலும் அவளது மனவுறுதியை மாற்ற எவ்வளவோ முயன்றதும் வீணாயிற்று. அந்த மங்கையோ தன் மனத்தில் இருந்த காதலையும் கருத்தையும் மதனகோபாலனிடம் எப்படி வெளியிடுவது என்பதையும், தான் மாரமங்கலம் மைனரையே மணந்து கொள்ள வேண்டும் என்று பிடிவாதமாகக் கூறும் தனது அத்தையின் மனதைத் தான் எப்படி மாற்றுவது என்பதையும் அறியாமல், தனது மன நிலைமையை வெளியிட மிகுந்த லஜ்ஜை அடைந்தவளாய், பரம சங்கடமான நிலைமையில் இருந்து தவித்துக் கொண்டிருந்தாள். முதல் நாளைய பிற்பகலில், அழுது விசனித்துக் கொண்டிருந்த தனக்கு மதனகோபாலன் அன்பாகவும் உருக்கமாகவும் தேறுதல் கூறிய காலத்தில், அவள் தனது காதலை ஒருவாறாக வெளியிட நினைத்தாள் ஆனாலும் உத்தம ஜாதி ஸ்திரீகளது ஆபரணங்களான நாணம், மடம், அச்சம் என்ற உணர்ச்சிகளால் அவள் தடுக்கப்பட்டுத் தயங்கி, இன்பமோ துன்பமோ என்று விவரிக்க ஒண்ணாத விதம் சஞ்சலமுற்றிருந்த காலத்தில், மீனாகூரியம்மாளும் துரைராஜாவும் தோன்றியதும், அவர்கள் மதனகோபாலனை இழிவு படுத்தி, அவன் அதன் பிறகு அந்த பங்களாவிற்குள் வரக்கூடாதென்ற உத்தரவோடு, அவனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/313&oldid=649861" இலிருந்து மீள்விக்கப்பட்டது