பக்கம்:மதன கல்யாணி-1.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 மதன கல்யாணி

மகாராணி போன்ற அதிகாரத்தைச் செலுத்துபவள்; புருஷன் இறந்து பதினைந்து வருஷகாலமாகத் தனது கற்புக்குப் பழுது வராமல் தனது யெளவனப் பருவத்தை எல்லாம் மிகவும் எச்சரிப் பாகக் கழித்தவள். ஆகையால் அந்தச் சீமாட்டி தனக்குத் தானே இப்படிப்பட்ட இழிவையும் பழிப்பையும் உண்டாக்கிக் கொள்ள மாட்டாள். முதலில், இந்த விஷயத்தை, அவள் வெளியிடவும் விரும்பவில்லை; அத்தையம்மாளுடைய வற்புறுத்தலினாலேயே அவள் வெளியிட்டாள். ஆகவே, அவள் சொன்னது கற்பனை யாக இருக்காது. உண்மையிலேயே மதனகோபாலன் அப்படித் தான் நடந்து கொண்டிருக்க வேண்டும். மற்ற சிறிய பெண்களிடம், தனது எண்ணம் நிறைவே. ராதென்று நினைத்து, விதவையான அந்த அம்மாளைச் சுலபத்தில் தனது வசப்படுத்தி விடலாம் என்று நினைத்திருப்பானோ! கல்யாணியம்மாளும் நல்ல கட்டழகுள்ள வள் ஆதலால், அவளது அபாரமான செல்வத்தையும், செல்வாக் கையும், பேரழகையும், விதவை நிலைமையையும் கருதியே, அவன் இவ்வாறு முயற்சி செய்திருக்க வேண்டும். ஆகா இப்படிப் பட்ட மனிதரிடத்திலா என்னுடைய பிரியம் எல்லாம் ஏற்பட வேண்டும் ஐயோ! நான் ஏன் அவனைப் பார்த்தேன். இப்படிப் பட்ட துன்மார்க்க நடத்தையுள்ள மனிதனை எனக்கு வீணை வாத்தியாராக ஏன் அமர்த்தினார்கள்! ஆகா! அந்த மனிதன் என்னுடைய மனதை எவ்வளவு தூரம் நிலைகுலைத்துப் பாழாக்கி விட்டான். அடடா! அவன் என் விஷயத்தில் இவ்வளவு தூரம் வஞ்சகனாக நடந்திருந்தும், இன்னமும் அவனுடைய சிங்கார வடிவம் என் மனதை விட்டு விலகமாட்டேன் என்கிறதே! என் மனதில் அவன் விஷயத்தில் முன்னிலும் அதிகமான வாத்சல்யம் சுரந்து பொங்குகிறதே! அவனை இன்னொரு முறை கண்ணாரப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் துடிக்கிறதே! ஆகா, என்ன செய்வேன்! நேற்றைக்கு முந்திய நாள் அவன் இங்கே இருந்த காலத்தில் எவ்வித முகாந்தரமும் இல்லாமல், அவனுக்கு இழிவு ஏற்பட்டது போல, நேற்றும் கல்யாணியம்மாளுடைய பங்களாவில் தற்செயலாக அவனுக்கு இப்படிப்பட்ட துன்பம் நேர்ந்திருக்குமோ! அவன் உண்மையில் குற்றமற்றவனாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/317&oldid=649869" இலிருந்து மீள்விக்கப்பட்டது