பக்கம்:மதன கல்யாணி-1.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 305

அவளது மனத்தில் சான்னித்தியம் செய்ததன்றி மறுநாள் நிச்சய தாம்பூலம் வந்துவிடுமே என்றும், கேவலம் துர்நடத்தையும் துஷ்டகுணமும் உள்ள மைனரைத் தான் மணக்க நேருமே என்ற பெரும் பீதியும் பெருங் கவலையும் எழுந்து அவளைக் கலக்கிக் கொண்டிருந்தன. அதனால், அவள் அன்று இரவு முழுதும் நித்திரை கொள்ளாமல், தனது இமைகளைத் திறந்தபடியே விழித்திருந்து அந்த இரவுப் பொழுதைப் போக்கினாள். தான் மதன கோபாலனை மணக்க நேராது போய், தனக்கும் மைனருக்கும் கலியான முகூர்த்தம் குறிக்கப்படுமானால், அன்றைய தினம் எப்படியாகிலும் தான் தற்கொலை செய்து கொள்வதே முடிவென, அவள் அதுகாறும் எண்ணி இருந்தவள் ஆதலால் இப்போது மதன கோபாலனும் துர்நடத்தையும், துஷ்டத்தனமும் நிறைந்தவன் என்பதை உணரவே அவளது மனம் பதறியது, தான் எவரையும் மணவாமல் தற்கொலை செய்து கொள்வதே உத்தமம் எனத் தோன்றியது. ஆனால், மதனகோபாலன் உண்மையிலேயே அப்படிக் கேவலமாக நடந்து கொள்ளக் கூடியவனாக இருப்பானோ என்ற பெருத்த ஐயம் அடிக்கடி எழுந்து, அவளது மன உறுதியைத் தளரச் செய்தது. எப்படியாகிலும், தான் முயற்சி செய்து மதனகோபாலனைக் கண்டு, கல்யாணியம்மாளிடத்தில் அவன் அவ்வாறு நடந்து கொண்டது உண்மைதானா என்பதை நேரில் கேட்டால், அவனது சொற்களில் இருந்தும் முகக் குறிகளில் இருந்தும் அவன் எப்படிப்பட்டவன் என்பதை தான் எளிதில் உணர்ந்து கொள்ளலாம் என்ற ஒரு யோசனை தோன்றியது. ஆனால் தனது பங்களாவிற்கே வரக்கூடாதென்று மீனாகூஜியம் சிாள் அவனைத் தடுத்திருப்பதால், தான் அவனோடு எப்படிப், பேசுவது எவ்விடத்தில் சந்திப்பது என்ற கவலைகள் தோன்றின. பகல் பொழுதில் தான் அவனைச் சந்தித்துப் பேசுவது அபாயகர மாகத் தோன்றியது. மறுநாள் இரவு எட்டரை மணிக்கு தன்னை அவர்கள் சாரட்டில் வைத்து மேளதாளத்தோடு மாரமங்கலத்தாரது பங்களாவிற்கு அழைத்துப் போகப் போகிறார்கள் என்பதை போஜன சமயத்தில் மீனாகூஜியம்மாள் சொன்ன வார்த்தைகளில் இருந்து உணர்ந்து கொண்டிருந்தாள். ஆகையால் எப்படியாவது ம.க.1-21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/322&oldid=649880" இலிருந்து மீள்விக்கப்பட்டது