பக்கம்:மதன கல்யாணி-1.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 மதன கல்யாணி

தந்திரம் செய்து மறுநாள் இரவு ஏழரை மணிமுதல் எட்டு மணிக்குள் அவனைச் சந்தித்து, அவனோடு பேசி உண்மையை அறிந்துவிட வேண்டும் என்ற ஒரு வகையான முடிவு அவளது மனதில் ஏற்பட்டது. அப்போது விடியற்காலம் ஐந்து மணிநேரம் இருக்கலாம். கண்மணியம்மாள் தனது சயனத்தை விட்டு எழுந்து, அந்த அறையின் கதவை உட்புறத்தில் தாளிட்டுக் கொண்டு, மின்சார விளக்கைப் பொருத்தி, ஒரு மூலையில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து, தனக்கெதிரில் இருந்த மேஜையின் சொருகு பெட்டியை (டிராவை) இழுத்து, அதற்குள் இருந்த தனது சங்கீத நோட்டுப் புஸ்தகத்தையும் பென்சிலையும் வெளியில் எடுத்து, நோட்டில் எழுதப்படாமல் இருந்த பக்கங்களில் ஒன்றைப் பிரித்தெடுத்து வைத்துக் கொண்டு அதில் அடியில் வருமாறு எழுதலானாள்:

வாத்தியார் அவர்களுக்கு அநேக நமஸ்காரம் செய்து வணக்கமாக எழுதிக் கொள்ளும் விஞ்ஞாபனம்.

ஒரு முக்கியமான விஷயத்தை நான் உங்களிடம் நேரில் தெரிவிக்க விரும்புகிறேன் ஆகையால், நீங்கள் இன்று சாயுங் காலம் ஏழரை மணிக்கு மேல் எட்டு மணிக்குள்ளாக, எங்களுடைய பங்களாவின் பின்புறத் தோட்டத்தில் இருக்கும் ஆலமரத்தடியில் வந்திருக்கும்படி பிரார்த்திக்கிறேன். தோட்டத்தின் பின்புற வேலியில் படலினால் மூடப்பட்ட வழி ஒன்று இருக்கிறது. அந்தப் படலின் கட்டை அவிழ்த்து அதைத் திறந்து கொண்டு சுலபமாக உள்ளே வரலாம். உங்களை எவரும் பார்க்கவும் மாட்டார்கள். நீங்கள் வருவதைக் கண்டாலும் தடை செய்யாமல் இருக்கும்படி தோட்டக்காரனிடம் நான் சொல்லி வைக்கிறேன். இப்படி ரகசியமாக நீங்கள் உள்ளே வருவதும், நாம் இருவரும் சந்திப்பதும் தவறான காரியம் என்று நீங்கள் நினைப்பீர் கள் என்பதை நான் அறிவேன். ஆபத்துச் சமயத்தில் பாவம் ார்க்கக் கூடாதென்று சொல்லுவார்கள். அதைப் போல விஷயம்

திக அவசரமானதும், நிரம்பவும் விபரீதமானதும் ஆதலால்,

கள் இதற்குப் பின்வாங்க வேண்டாம். நான் அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/323&oldid=649882" இலிருந்து மீள்விக்கப்பட்டது