பக்கம்:மதன கல்யாணி-1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 17

சாகசங்களோடும் ஒவ்வொரு பெண்மணியும் தோன்றி தனது திறமையைக் காட்ட ஆரம்பித்தாள். கடைசியாக, தாசி வேஷம் தரித்துத் தோன்றிய மோகனாங்கியைக் கண்டவுடனே ஜனங்கள் அடக்க முடியாத ஆவேசமும், வெறியும், கரைகடந்த குதூகலமும், பெருமகிழ்ச்சியும் கொண்டு தங்களை மறந்து, கைகொட்டி ஆர்ப்பரித்தனர். அவள் வரும்போதே யாவரும் கண்டு திகைக்கும் படி பார்சீ நடனமாடிய வண்ணம் ஒர் இந்துஸ்தானிப் பாட்டை எடுத்து ஜிலுஜிலென்று பன்னிர் தெளிப்பது போல மகா ஜனங்களின் செவிகளில் தூவிக் கொண்டு விண்ணுலகினின்று தெய்வ கன்னிகை இறகுகளோடு வந்து இறங்குவது போ

‘கற்றைவிரி பொற்கடை மயிர்த்துறு கலாபம் சுற்றுமணி புக்கவிழை மிக்கிடை துவன்றி நிற்றவழ வாணிமிர மெய்யணிகள் மின்னச் சிற்றிடை நுடங்கவொளிர் சீரடி பெயர்த்து’

மேடையின் மீது காட்சி கொடுத்தாள். ஆகா! அவளது அற்புத வடிவத்தை என்னவென்று சொல்வது! ஒப்புயர்வில்லாத அற்புத வனப்போடும் தோன்றிய அந்த அணங்கின் அழகை வருணிக்க தெய்வ பாஷையான வடமொழியிலும் தக்க சொற்களும் இல்லை என்றே கூற வேண்டும். அதுகாறும் கூக்குரல் செய்து கொண்டிருந்த மகாஜனங்கள் யாவதும் உயிரற்ற பதுமைகள் போல பேச்சு மூச்சின்றி வாயைப் பிளந்து கொண்டு அப்படியப் படியே திகைத்து, அவள் மீது சென்ற தங்களது நாட்டத்தையும் மனத்தையும் தங்களது வசம் திருப்பச் சிறிதும் வல்லமை அற்றவராய் பிரமிப்படைந்து தேனில் வீழ்ந்த ஈக்கள் போல இன்ப வெள்ளத்தில் கிடந்து தத்தளித்தனர்; எள் விழும் சப்தமும் நன்றாகக் கேட்கத் தக்கபடி நிச்சப்தம் குடி கொண்டிருந்தது.

அந்தப் பெண்பாவையின் வயது பதினெட்டுக்கு மேல் இராது பதினான்கு லோகங்களிலும் உள்ள அழகிற் சிறந்த யெளவன மடந்தையரின் லட்சணங்களை எல்லாம் அள்ளி ஒன்று சேர்த்துக் கடைந்தெடுத்த அமிர்த சாரமே அந்த வடிவமாக அமைந்து தோன்றி மனதைக் கொள்ளைக் கொண்டதோ என விளங்கி, ம.க.i-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/35&oldid=649899" இலிருந்து மீள்விக்கப்பட்டது