பக்கம்:மதன கல்யாணி-1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 21

குலேபக்காவலியின் ஒரு காட்சி முடிய, மறுகாட்சி தயாராகும் போது ஜனங்கள் கூச்சலிடுவார்கள்; மோகனாங்கி திரும்பவும் எப்போது வருவாள் வருவாள் என்று ஆவலோடு காத்திருப் பார்கள் மற்ற நடிகைகள் தோன்றினால், அவர்களைத் தூவித்து, உள்ளே போகும்படி கூறி பதற்றமான மொழிகளை உபயோகிப் பார்கள்; மோகனாங்கி மறுபடி தோன்றினால் முன் போல வெறி கொண்டு தலைவிரித்து ஆடுவார்கள். இவ்வாறு அந்த ஜகன் மோகினி அன்றிரவு நெடுநேரம் வரையில் அந்த மகா ஜனங்களை குரங்குகள் போல ஆடச் செய்தனள். ஒவ்வொரு காட்சியிலும் அவளுக்கு எண்ணிறந்த தங்கப் பதக்கங்களும், புஷ்ப ஹாரங் களும், வைர மோதிரங்களும், பட்டாடைகளும் வந்து குவிந்து கொண்டிருந்தன. கரகோஷங்களும், சிரக்கம்பங்களும், சந்தோஷக் கூச்சல்களும் கடைசி வரையில் அதிகரித்துக் கொண்டே போயின. கடைசியில் நாடகம் முடிவடைந்தது. அதுகாறும் மூட்டைகள் போல ஒருவர் மேல் ஒருவராக அடுக்கிக் கொண்டு கிடந்த ஜனங்கள் யாவரும் சமுத்திர கோஷம் போல ஆரவாரித்து எழுந்து தாறுமாறாகப் புகுந்து ஒருவர் மீது ஒருவர் விழுந்து துகைத்த வண்ணம் வெளியிற் செல்ல ஆரம்பித்தனர். சிலர் சிலராக உள்ளே சென்றதைவிட, யாவரும் ஒரே காலத்தில் வெளிப்பட முயன்றது மகா கோரமான காட்சியாக இருந்தது. குழந்தைகளை இழந்தோர் சிலர்; ஆபரணங்களைத் தொலைத்தோர் பலர். ஒருவர் தவறாமல் எல்லோரும் தமது மனத்தையும் மனதின் நல்ல நிலைமையையும் மோகனாங்கியிடம் பறிகொடுத்துத் திரும்பினோராகவே இருந்தனர்.

இவ்வாறு ஜனங்கள் எல்லோரும் வெளியில் போக அரை நாழிகை சென்றது. மோகனாங்கி தோன்றி ஆடிய இடத்தை விட்டு வெளியில் போக மனமற்றவராய் இன்னமும் சிறிது உள்ளே நின்றோரான சிலர் பலவந்தமாக வெளிப்படுத்தப்பட்டனர். அந்த நாடகத்தில் நடித்த யாவரும் வெளியில் போவதற்கு மேடையின் பின்புறத்தில் ஒரு வழி இருந்தது. அந்த வழியின் வெளி வாசலில் நூற்றுக்கணக்கான ஜனங்கள் நடிகைகள் எல்லோரும் போவதைப் பார்க்க வேண்டும் என்னும் ஆசையோடு நின்றனர். அவர்களுக் காக எண்ணிறந்த வண்டிகளும் சாரட்டுகளும் தயாராக நின்றன. அவ்விடத்தில் துரைராஜாவின் தவிசுப்பிள்ளையான பொன்னம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/39&oldid=649907" இலிருந்து மீள்விக்கப்பட்டது