பக்கம்:மதன கல்யாணி-1.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 - - மதன கல்யாணி

விழுந்திருக்கிற தென்பது நன்றாய்த் தெரிகிறது. நீ போய் அவளைப் பிடித்துக் கொண்டால் அப்புறம் என்னை மறந்து விடுவாய்; ஆகையால், நானே போய் இதை முடித்துக் கொள்ளு கிறேன்” என்றான்.

துரைராஜா புன்சிரிப்போடு, “நாம் ஒன்று செய்வோம்; எனக்கும் அவளிடத்தில் சிநேகம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை மனதில் எழுந்து வருத்துகிறது. ஆகையால், நாம் திருவுளச்சீட்டுப் போட்டுப் பார்ப்போம். யாருக்கு பிரைஸ் விழுகிறதோ அவர் போக வேண்டியது” என்றான்.

மைனர் அதற்கு இணங்க, உடனே சீட்டுப் போடப்பட்டது. அதிர்ஷ்டம் மாரமங்கலம் மைனர் பக்கத்திலேயே இருந்தது. வெற்றி அவருக்கே கிடைத்தது; ஆதலால் அவரே மறுநாட் காலையில் ஆலந்துாருக்குப் போய் மோகனாங்கியிடத்தில் சிநேகம் செய்வதற்கு வேண்டிய அனுகூலங்களைத் தேடுவதென்று இருவரும் முடிவு செய்து கொண்டனர்; மாரமங்கலம் மைனர் அன்றிரவு அந்தப் பங்களாவிலேயே சயனித்து இருந்தான் ஆனாலும், அவனுக்குத் துக்கம் என்பதே பிடியாமையால், பொழுது விடியும் வரையில் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்திருந்தான்; பொழுது விடியும் முன் எழுந்து அந்தப் பங்களாவை விட்டு நடந்து அரைமயில் துரத்திற்கு அப்பால் இருந்த தனது பங்களாவை அடைந்தான். அவனது தாயும் இளைய சகோதரிகள் இருவரும் அந்த பங்களாவில் இருந்தனர். அவர்களுக்குத் தெரியாமல் வெளியில் போய்விட வேண்டும் என்னும் எண்ணத்தோடு அவன் தனிமையான தனது விடுதிக்குப் போய் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொள்ளத் தொடங்கினான்.

அப்போது அவனது மனம் மிகுந்த உற்சாகத்தினாலும் ஆவலினாலும் பலவகைப்பட்ட நினைவுகளினாலும் துடித்துப் பொங்கிக் கொண்டிருந்தது. தான் எவ்விதமான தந்திரஞ் செய்து மோனாங்கியின் நட்டை அடைவது என்பதைக் குறித்து அவன் யோசனை செய்தான்; அப்போதே நேராக அவளிருந்த பங்களாவிற்குள் போவது தவறென்று நினைத்தான்; அந்தப் பங்களாவின் சுற்றுப்புறங்களில் வசிப்போர் யாவர் என்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/44&oldid=649918" இலிருந்து மீள்விக்கப்பட்டது