பக்கம்:மதன கல்யாணி-1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 27

ஆராய்ந்து அறிந்து, அவர்களிடத்தில் தந்திரமாகப் பேசி மோகனாங்கியின் வரலாற்றையும், அவளது பங்களாவில் உள்ள வேலைக்காரிகளிடம் பழக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். அவன் தனது அழகு, யோக்கியதை முதலியவற்றைப் பற்றி மிகவும் பிரமாதமான அபிப்பிராயம் கொண்டிருந்தான்; தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்ட உடனே நிலைக் கண்ணாடிக்கு எதிரில் நின்று குனிந்து நிமிர்ந்து உதட்டை நீட்டி பல்லைக் காட்டிப் பார்த்துக் கொண்டான்; கண்ணாடிக்குள் விகாரமான ஒரு சிறுவனது வடிவம் தெரிந்தது ஆயினும், கண்ணாடி பூதக்கண்ணாடி ஆதலால் தனது சரியான வடிவத்தை அது உள்ளபடி காட்டவில்லை என்று நினைத்து, தான் மிகவும் அழகுடைய மன்மதன் என்றே மனதிற்குள் நினைத்துக் கொண்டான். தவிர, அவனது சமஸ்தானத்தில் உள்ள குடியானவர் களும் அரண்மனையின் சிப்பந்திகளும் மற்றவரும் சிறு பிராயத்தில் இருந்தே அவனை “மகாராஜா மகாராஜா” என்று விளித்து, அவனுக்குக் கூழை கும்பிடு போட்டு அவனது மனப் போக்கின்படி நடந்து கொண்டு வந்ததனால் அவன் தன்னைச் சர்வ வல்லமை யுள்ள ஒரு சக்கரவர்த்தி என்றே நினைத்துக் கொண்டான்; அழகு, செல்வம், உன்னத பதவி முதலிய எவ்வகை யிலும் தான் இணையற்று இருப்பதால், எந்த ஸ்திரியையும் தான் வசியப் படுத்துவது எளிதென்று நினைத்தான். தான் ஒரு வார்த்தை சொல்ல வேண்டியதே தாமதம்; சொன்னால் எப்படிப்பட்ட வளும், சலாம் செய்து கொண்டு, தனது இச்சைப்படி நடப்பாள் என்பது அவனது . நிற்க; பெண்பாலரின் கற்பிலேயே அவனுக்கு நம்பிக்கை கிடையாது. அதிலும் நாடகத்தில் வந்து ஆயிரக்கணக்கான ஜனங்களுக்கு முன்னால் நடிப்பவளிடத்தில் கற்பென்பதே இராதென்பது அவனது உறுதியான கொள்கை. தவிர அவளது வரலாறுகளை விசாரித்து அறிந்த பின்பு, தனது சமஸ்தானாதிபதி உடைகளை விலக்கிவிட்டு ஒர் ஏழையைப் போல உடை அணிந்து அவளது பங்களாவிற்கு அருகில் இருந்து அவள் போகும்போதும் வரும்போதும் கண்ணில் பட்டுக் கொண்டிருந்தால், அவள் தன்னைக் கண்டு வியப்படைந்து ஏழை உடைகளுக்குள் இருப்பது ஒரு பெருத்த சமஸ்தானாதிபதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/45&oldid=649920" இலிருந்து மீள்விக்கப்பட்டது