பக்கம்:மதன கல்யாணி-1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மதன கல்யாணி

என்பதை எளிதில் கண்டு கொள்வாள் என்றும், அதன் பிறகு தான் தனது கருத்தைத் தந்திரமாக அவளுக்கு அறிவுறுத்தினால், அவள் உடனே நிரம்பவும் வியப்படைந்து, அவளுக்காக தான் தனது மகா உன்னத பதவியை விட்டு தாழ்ந்த நிலைமைக்கு வந்தது பற்றி, அவள் தன்மீது கரைகடந்த மையல் கொண்டு தனது பாதத்தில் சரணாகதி அடைந்து விடுவாள் என்றும் நினைத்து மனப்பால் குடித்தவனாய், ஒரு வகையான தீர்மானம் செய்து கொண்டு புறப்பட்டான். முதல் நாள் மாலையில் நாட்டுக் கோட்டைச் செட்டியிடம் வாங்கிய பணத்தில் தனது பாகமாகிய மூவாயிரம் ரூபாயும் நோட்டுகளாக ஒரு மணிபர்சில் வைக்கப்பட்டிருந்தன ஆதலின், அதை எடுத்து அவன் தனது சட்டையின் உட்புறப் பையில் வைத்துக் கொண்டான்; வைரக் கடுக்கன்கள், வைர மோதிரங்கள், தங்கக் கடிகாரம், தங்கச் சங்கிலி, காப்பு, கொலுசு முதலிய அலங்காரங்களோடு வெளிப்பட்டு, பங்களாவில் இருந்த எவரது கண்ணிலும் படாமல் தெருவை அடைந்து சிறிது துரம் நடந்து அங்கே எதிர்ப்பட்ட ஒரு குதிரை வண்டியை ஆலந்துர் வரையில் அமர்த்தி அதில் உட்கார்த்து கொண்டான். வண்டி வேகமாக ஒடி, அரைமணி நேரத்தில், மோகனாங்கி இருந்த பங்களாவிற்குச் சிறிது துரத்திற்கு அப்பால் இருந்த ஆலந்துரை அடைந்தது. மைனர் ஜெமீந்தார் கீழே இறங்கினான். வண்டிக் காரன் தனது கூலியைப் பெற்றுக் கொண்டு, வந்த வழியே திரும்பிப் போய்விட்டான்.

3-ம் அதிகாரம் அம்பட்டக் கருப்பாயி, கட்டையன் குறவன்

குதிரை வண்டியில் சென்ற போதே மோகனாங்கியின் பங்களா இன்னது தான் என்று அறிந்து கொண்டு போன மைனர் ஜெமீந்தார் ஆலந்தூரில் வண்டியில் இருந்து கீழே இறங்கிய பின், மெள்ள நடந்து வண்டி சென்ற பாதையின் வழியாகவே திரும்பி வந்தான். அந்த ஸ்திரீயின் பங்களாவிற்கு அரைக்கால் மயில் துரத்தில் மைனர் நின்று, மிகுந்த மகிழ்ச்சியோடு அதை உற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/46&oldid=649922" இலிருந்து மீள்விக்கப்பட்டது