பக்கம்:மதன கல்யாணி-1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 29

நோக்கினான். அந்தப் பங்களா பாதையை ஒட்டியதாக இருந்தாலும், பாதையில் இருந்து 50-கஜ தூரம் வரையில் அழகான பூஞ்சோலை இருந்தது. அதன் பிறகு இரண்டு மேன்மாடங்களை உடைய அழகிய புதிய கட்டிடம் இருந்தது. பின்புறத்தில் தென்னை, மா, பலா முதலிய மரங்கள் தோப்பு போல அடர்ந்திருந்தன. பெட்டி வண்டி, குதிரை முதலியவை நிற்பதற்கு லாயங்களும், ஏற்றங்களைக் கொண்ட கிணறுகளும் காணப்பட்டன. ஓர் ஆள் உயரம் எழுப்பப் பட்டிருந்த ஒரு மதில் நாற்புறத்திலும் அவற்றை வளைத்துக் கொண்டிருந்ததன்றி, அதன் முன்புறத்தில், பாதையில் இரும்புக் கம்பிகளால் ஆன கதவும் வாசலும் இருந்தன. அதில் இருந்தவள் மற்ற நாடகக்காரிகளைப் போல ஏழையல்ல என்றும், தக்க செல்வம் உடையவள் என்றும், அந்தச் செல்வச் செருக்கினாலேயே அவள் எவர்க்கும் இடங்கொடாமல் அசட்டை செய்கிறாள் என்றும் எண்ணிக்கொண்ட மைனர், நாற்புறங்களிலும் திரும்பி கண்கண்ட தூரம் வரையில் நோக்கினான்; மனிதர் குடியிருக்கக்கூடிய வீடே காணப்படவில்லை. பங்களாவுக்கு எதிர்ப்புறத்தில் அரைக்கால் மயில் துரத்திற்கு அப்பால், சில தென்னை மரங்களும் ஒரு பெருத்த வைக்கோல் போரும் ஒரு புளியமரமும் காணப்பட்டன. பூமி அதுவரையில் ஏற்றமானதாகவும் அதற்கப்புறம் இறக்கமான தாகவும் காணப்பட்டது. ஆகையால் அதற்கப்பால் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்னும் ஒரு வகையான அவா அவனது மனதில் எழுந்து தூண்டியது. பாதையில் இருந்து அந்தத் தென்னந்தோப்பை நோக்கி ஒர் ஒற்றையடிப்பாதை சென்றதைக் காணவே, அதன் வழியாகச் சென்றால் தோப்பிற்கு அப்புறத்தில் காட்டுக் கொட்டகை முதலிய மனிதர் இருப்பிடம் ஏதாவது இருக்கலாம் என்ற ஒரு யூகம் தோன்றியது. அவன் உடனே அந்த ஒற்றையடிப் பாதையைப் பின்பற்றி நடந்து தென்னந்தோப்பை அடைந்தன. அதற்கு அப்புறத்தில் இருந்த இறக்கத்தில் சற்று துரத்தில் ஒரு சிறிய ஒட்டு வீடு காணப்பட்டது. அது தனிமையாக இருந்ததைக் காண, மைனருக்கு ஒரு வகையான மகிழ்ச்சி தோன்றியது. அவன் விரைவாக நடந்து அந்த வீட்டை அடைந்தான். அது நெடுங்காலத்திற்கு முன் கட்டப்பட்டதாகவும், மிக்க எளியதாகவும் காணப்பட்டது. வாசற் கதவு மூடி உட்புறத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/47&oldid=649923" இலிருந்து மீள்விக்கப்பட்டது