பக்கம்:மதன கல்யாணி-1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 மதன கல்யாணி

தாளிடப் பெற்றிருந்தது. வெளிப்புறத்தில் எவரும் காணப்பட வில்லை, உள்ளே யார் இருக்கிறார்களோ கதவைத் தட்டினால் கோபித்துக் கொள்வார்களோ என்ற நினைவினால் மைனர் அச்சம் கொண்டு தயங்கி திண்ணை மீது உட்கார்ந்து இரண்டு மூன்று முறை கனைத்துக் கொண்டு குரல் கொடுத்தான், உட்புறத்தில் இருந்தோர் அவனைக் கவனித்ததாகத் தோன்றவில்லை. கால் நாழிகை கழிந்தது. கதவும் திறக்கப்படவில்லை. அவன் கையைக் கதவில் வைத்து மெதுவாக அழுத்திப் பார்த்தான்; உட்புறத்தில் தாளிடப்பட்டிருந்தது; இன்னொரு கால் நாழிகை நேரம் மெளனமாக உட்கார்ந்திருந்த பின் சிறிது துணிவடைந்து, “ஐயா! ஐயா என்று கூப்பிட்டவனாய், கதவை மெதுவாகத் தட்டினான். “ஆர் ஐயா! அது?” என்று கேட்டுக் கொண்டு, ஒரு பெண்பிள்ளை கதவைத் திறந்து மைனரை உற்று நோக்கினாள். அவள் சுமார் நாற்பத்தைந்து அல்லது ஐம்பது வயதடைந்த ஒரு ஏழை ஸ்திரீ நன்றாகத் தடித்து உயர்ந்த விகாரமான சரீர்த்தைக் கொண்டவள்; பல இடங்களில் கிழிந்திருந்த ஒரு கண்டாங்கிச் சேலையை கட்டிக்கொண்டு காதில் நாகபடம், கொப்பு, கையில் இரண்டு விரல்களில் பித்தளை மோதிரங்கள், கழுத்தில் பொன் வைரமணி மாலை, சிவப்பு நிறமுள்ள ஸ்படிகமணி மாலை ஆகிய அலங்காரங்களோடு காளிகாதேவி போலக் காணப்பட்டாள். அவளைக் கண்டவுடனே மைனருக்குத் தான் கோரிவந்த காரியத்துக்கு அவள் அனுகூல மானவள் அல்ல என்ற நினைவும் அதிருப்தியும் ஏற்பட்டன. அவன் திண்ணையை விட்டுக் கீழே இறங்கினான். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களோடு பெரிய மனிதர் வீட்டு பிள்ளையைப் போல இருந்த அந்தச் சிறுவன், ஒரு மூலைக் காட்டில் இருந்த தனது வீட்டை நோக்கி நடுப்பகல் வேளையில் வந்ததைக் குறித்து வியப்பும் திகைப்பும் அடைந்து அம்பட்டக் கருப்பாயி, “சாமி ஒக்காருங்க, நீங்க எந்த ஊரு சாமி?” என்று ஒரு வகையான அன்போடு பேச, அதைக் கேட்டமைனர், சிறிது துணிவடைந்தான். முதல் பார்வையில் அவளிடத்தில் கொண்ட அருவருப்பும் சிறிதளவு விலகியது. அவன் அவளை நோக்கி, “நான் இருப்பது தேனாம்பேட்டை நான் ஒரு காரியமாக சைதாப்பேட்டைக்கு வந்தேன். இந்த ஆலந்துரில் என்னுடைய சிநேகிதர் ஒருவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/48&oldid=649925" இலிருந்து மீள்விக்கப்பட்டது