பக்கம்:மதன கல்யாணி-1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 - மதன கல்யாணி

ரூபா நோட்டை எடுத்து அவளுக்கெதிரில் அலட்சியமாகப் போட்டு, “இதோ இதையும் எடுத்துக்கொள். எனக்கு நல்ல படுக்கையாக ஒன்று தயாரித்து வை; உனக்கு அதன் பொருட்டு ஏதாவது செலவு ஏற்படும். ஆகையால் இதையும் எடுத்துக்கொள். வேலைக்காரி எவ்வளவு பணம் கேட்டாலும் கவலை இல்லை. இந்தக் காரியத்தை முடிக்க வேண்டியது உன்னுடைய பொறுப்பு. நான் போகலாமா? உன்னை நம்பி இருக்கலாமா? மறந்து போய் விடுவாயோ?” என்றான். - -

அதைக் கேட்ட கருப்பாயி, கையெடுத்துக் கும்பிட்டு மிகவும் வணக்கமாக “சாயங்காலம் வந்துதான் பாருங்களேன். ஒங்க மனசு குளிரும்படி செஞ்சா சரிதானே” என்றாள். அதைக் கேட்ட மைனர் அவளிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவனாய், திண்ணையை விட்டிறங்கிய வண்ணம், “நான் போய்விட்டு சாயுங்காலம் சரியாக 7-மணிக்கு இங்கே வந்து விடுகிறேன்” என்று கூறி அவளது வணக்கத்தைப் பெற்றுக் கொண்டு ஒற்றையடிப் பாதையின் வழியாக நடந்து, ஆனந்த பரவசம் அடைந்தவனாய் ராஜ பாட்டையை அடைந்து ஆலந்துர் சென்று அவ்விடத்தில் ஒரு வண்டி அமர்த்திக் கொண்டு தேனாம்பேட்டையை நோக்கிச் சென்றான்.


அவ்வாறு மைனர் சென்றபின் அரை நாழிகை கழித்து, அம்பட்டக் கருப்பாயி தனது வீட்டின் கதவை மூடி வெளியில் பூட்டிக் கொண்டு அவ்விடத்தை விட்டு ஒற்றையடிப் பாதையின் வழியாக நடந்து ராஜபாட்டைக்கு வந்து அங்கிருந்த பங்களா வண்டையில் நின்று நெடுநேரம் காத்திருந்தாள். பங்களாவிற் குள்ளிருந்த தென்னை மரங்களில் கட்டப்பட்டிருந்த மொந்தை களிலுள்ள கள்ளை இறக்கிக் கொள்ளும் பொருட்டு அவ்விடத் திற்கு வந்த சாணார முத்துக்கருப்பனிடம் பேச்சுக் கொடுத்து, தனது பையைத் திறந்து வெற்றிலை புகையிலை முதலிய வசிய மருந்தை எடு க் கொடுத்து கால் நாழிகை நேரம் வரையில் அவனோடு சம் rத்திருந்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு ராஜபாட்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/52&oldid=649934" இலிருந்து மீள்விக்கப்பட்டது