பக்கம்:மதன கல்யாணி-1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 37

அடுத்த நிமிஷம் கதவு திறக்கப்பட்டது; உட்புறத்தில் ஒரு ஸ்திரீ நின்று கொண்டிருந்தாள். அவளுக்குச் சுமார் இருபத்தைந்து வயதிருக்கலாம். அவள் முரட்டு உடம்பைப் பெற்றவளானாலும் மிகவும் கட்டான அழகிய தேகத்தையும், வசீகரமான முகத்தையும் உடையவளாய் இருந்தாள். அவளைக் கண்டவுடனே கருப்பாயி சந்தோஷமான பார்வையாகப் பார்த்து, “வள்ளியம்மா ஒம்புருசன் இருக்கறானா?” என்றாள். “இருக்கறாவ. ஒன்னே உள்ளற இட்டாரச் சொன்னாவ” என்றாள் அவள். அதைக் கேட்ட கருப்பாயி உள்ளே நுழைந்தாள். வள்ளியம்மை திரும்பவும் உட்புறத்தில் தாளிட்டுக்கொண்டு, கருப்பாயிக்குப் பின்னால் நடந்தாள்; உட்புறம் எல்லாம் ஆடுகளும், கோழிகளும், காடைகளும், கவுதாரிகளும், அவற்றின் மல மூத்திரங்களும், அடுக்குப் பானைகளும், தொம்பைக் கூண்டுகளும், பலவகைப் பட்ட தானியங்களும், விசிப்பலகையும் நிறைந்து மூச்சுவிடவும் இடமின்றி இருந்தன. உட்புறத்தின் ஒரு மூலையில் கயிற்றுக் கட்டில் ஒன்றன்மேல், தடித்துக் கருத்த தேகமும், பயங்கரமான கொடிய தோற்றமும் கொண்ட ஒரு மனிதன் திண்டில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான். வாய் நிறைய புகையிலை, வெற்றிலை முதலியவற்றைப் போட்டு மென்று கொண்டும், பக்கத்தில் இருந்த ஒரு படிக்கத்தில் சதக்கு சதக்கென்று எச்சிலை உமிழ்ந்து கொண்டும் இருந்தான். எங்குப் பார்த்தாலும் பாணாத்தடிகளும், பட்டாக்கத்திகளும் சொருகப்பட்டிருந்தன. இன்னொரு மூலையில் அடுப்பின் மேல், ஒரு சட்டியில் காட்டுப்பன்றியின் மாமிசம் வெந்து கொண்டிருந்தது. அவன் உட்கார்ந்திருந்த கட்டிலுக்கு அடியில் ஒரு மண் தோண்டியில் கள்ளும், சீசாபுட்டிகளில் சாராயம் முதலிய சீமைச் சரக்குகளும் இருந்தன.

அங்கே சாய்ந்திருந்த மனிதனுக்குச் சுமார் நாற்பது வயதிருக் கலாம். பெருத்த முகமும், அடர்ந்து கொம்புகள் போல நீண்டிருந்த மீசைகளும் அவன் மதுரை வீரனோ ஐயனாரப்பனோ முனிசுவரனோ என்ற அச்சத்தையும் உண்டாக்கின. புஜங்களும், கைகளும், மார்பும் எஃகினால் ஆக்கப்பட்டவனோ எனத் தோன்றி கத்தியால் வெட்டினாலும் கத்தியின் கூர்மையை மழுக்கி அதன் பற்களை உடைக்கத் தக்கவையாய் இருந்தன. அவன் மனித

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/55&oldid=649940" இலிருந்து மீள்விக்கப்பட்டது