பக்கம்:மதன கல்யாணி-1.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 மதனகல்யாணி

தேன். இதோ திரும்பி ஒடனும், வள்ளியம்மா கொண்டார வானாம். அப்பா கட்டையா! இன்னக்கி ராத்திரி பன்னண்டு மணிக்கு நீ எங்க ஊட்டுக்குக் கட்டாயமா வரணும். வரமுடியுமா என்றாள்.

கட்டையன்:- சங்கதி என்ன? நல்லாத்தான் சொல்லேன். இஞ்சே வேறே யாருமில்லையே பயமென்னா?

கருப்பாயி:- “ஒண்னுமில்லே. இன்னக்கி ராத்திரி எங்க ஊட்டுக்கு ஒரு மனிசன் வாரான். அவனெ காமரா உள்ளே படுக்கவைக்கப் போறேன். அவனெ ராத்திரியே ரகசியமா சரிபடுத்திப் புடனும். அவன் காதுலே இருக்கற வைரக் கடுக்கன், வைர மோதரம், தங்கக் கெடியாரம் எல்லாம் அஞ்சாயிரம் ரூபா தாளும். பணப்பையிலே ரூபா இருக்கும். நல்ல வேட்டை காரியத்தெ முடிக்கறத்துலே கஸ்டமே இல்லே. அவன் 17, 18-வயசுப் பையன்; கோளிக் குஞ்சு கணக்கா இருக்கறான். மூக்கெப் பிடிச்சா உசிரு போயிடும். சொத்தெ ஆளுக்குப் பாதியா எடுத்துக்கலாம்” என்றாள்.

கட்டையன்:- அந்தப் பையன் ஒங்க ஊட்டுக்கு என்னாத்துக்கு வாரான்?

கருப்பாவி: “எங்க ஊட்டுக்கிட்ட ஆலந்துருப் பாதையிலே ஒரு வங்கள இருக்குதல்ல. அதுலே ஒரு கூத்தாடிச்சி வந்துக்கிறா. அவ நல்லா முக்கும் முளியுமா பலே டீக்கா இருக்கறா. அவளோடெ வலெயிலே பையன் உளுந்து கெடக்கறான். அவளே சரிப்படுத் தணுமுன்னு எங்கிட்ட சொன்னான். அதுக்காவ வரச்சொல்லி இருக்கறேன். அவனெயே சரிப்படுத்திப்புட்டாப் போவுது”

எனறாள.

அதைக் கேட்ட கட்டையன், “சரி, அப்படியானா நல்ல வேட்டெதான். நான் மாத்தரம் வாறேன். பாளெ சீவற பீச்சாங்கத்தி, கைத்தடி ரெண்டும் போதும். ரெண்டையும் எடுத்தாறேன். நீ ஒரு மம்மட்டி மாத்தரம் தயாரா வச்சுவை. பன்னண்டு மணிக்கு அவன் நல்லா துங்கற சமயத்துலே, ஆடறுக்கற மாதிரி கத்தியாலே ஒரே அறுப்பா ஊட்டியெ அறுத்து காமயிலுக்கு அன்னாண்டே கொண்டு போயி குளிதோண்டி நல்லா பொதெச்சுப்புடுவோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/58&oldid=649944" இலிருந்து மீள்விக்கப்பட்டது