பக்கம்:மதன கல்யாணி-1.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 4?

ஆனா, காமரா உள்ளே நெத்தம் கித்தம் படாமே சாக்கிரதெயா காரியத்தெ முடிக்கணும் ஏதுன்னா பின்னாலே, அந்தப் போலீசுக்கார நாயிங்க ஏதாச்சும் தொந்தரவு பண்ணுவானுங்க. நீ கவலைப் படாதே. காரியத்தை ஒம் மனசுபோல முடிச்சுக் குடுக்கறேன். போய் ஆசரா இரு?” என்றான்.

கருப்பாளி:- சரி, சந்தோஷம். நீ தவறாமெ வந்துடனும். நான் அவங்கிட்ட பொய் சொல்லி நம்பவச்சு படுத்திருக்க வைக்கறேன். நான் அவசரமாப் போவனும்; போவட்டுமா? - என்று சொல்லிக் கொண்டே எழுந்தாள்.

கட்டையன்:- சரி போயித்துவா; கொஞ்சம் தாவத்துக் காச்சும் குடியேன் சொம்மாப் போறியே, நல்ல புதுக்கள்ளு இருக்குது; கொஞ்சம் ருசி பார்க்கிறியா? - என்று உற்சாகத்தோடு கேட்க, அவள் “இல்லேப்பா; ராத்திரி காரியமெல்லாம் முடியட்டும். அப்பாலே கொடங்கொடமாகக் கள்ளுக் குடிச்சுக்கலாம். நான் போயித்து வாறேன் வள்ளியம்மா கதவெ முடிக்கோ என்று சொல்லிக் கொண்டு வாசலை நோக்கிச் செல்ல, வள்ளியம்மை விரைவாக வந்து வாசற் கதவின் தாளைத் திறந்து அவளை அனுப்பிவிட்டு திரும்பவும் தாளிட்டுக் கொண்டு உள்ளே வந்தாள். அவ்விடத்தில் இருந்து புறப்பட்ட அம்பட்டக் கருப்பாயி விசை யாக நடந்து தனது இருப்பிடத்தை அடைந்து அன்றிரவிற்கு ஆக வேண்டிய ஏற்பாடுகளை எல்லாம் செய்து வைத்துக் கொண்டு மாரமங்கலம் மைனரது வருகையை மிகுந்த ஆவலோடு எதிர் பார்த்திருந்தாள்.


4-ம் அதிகாரம்

பெரிய இடத்துக் குழந்தைகள் ADiர்மங்கலம் மைனரது கதி எப்படி முடிந்தது என்பதைக் கூறும் முன், மாரமங்கலம் சமஸ்தானத்தைப் பற்றிய விவரம் சிறிதளவு தெரிய வேண்டியது அவசியமாக இருக்கிறது. மாரமங்கலம் என்பது தஞ்சை ஜில்லாவில் காவிரிக்கரைக்கு இருபுறங்களிலும் நெடுந்துரம் பரவிய ஒரு பெருத்த சமஸ்தானம். அதன் ஜெமீந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/59&oldid=649946" இலிருந்து மீள்விக்கப்பட்டது