பக்கம்:மதன கல்யாணி-1.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 43

பார்த்தார். அது அவனது செவிகளுக்கு ஏற்கவில்லை. பிறகு அவர் பணம் அனுப்புவதை நிறுத்தி விடுவதாகப் பயமுறுத்திப் பார்த்தார். பையன் அதற்கும் சரிப்படவில்லை. ஜெமீந்தார் மனம் உடைந்தவராய் கடைசியாக ஒரு கடிதம் எழுதினார். அவன் தனது தீய செயல்களை எல்லாம் விட்டு உடனே மாரமங்கலத்திற்கு வந்து விட வேண்டும் என்றும், அப்படிச் செய்யாவிடில் தமது பங்களா விற்குள் அவன் நுழையக் கூடாதென்று கண்டிப்பான கடிதம் எழுதி, அவன் தமது சொற்படி செய்யாவிடில் பங்களாவைப் பூட்டி முத்திரை வைத்துவிட்டு வந்துவிடும்படி மானேஜருக்கும் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தார். ஒரு நாள் பையன் இரவெல்லாம் குடித்து ஊரில் திரிந்துவிட்டு விடியற்காலம் முகத்தில் துணியைப் போட்டு மூடிக்கொண்டு பங்களாவிற்குள் நுழைந்த போது மானேஜர் குறுக்கே நின்று கடிதத்தைக் கொடுத்தார். அதைப் படித்தவுடனே பையனுக்குப் பெரிதும் கோபம் பொங்கி எழுந்தது. “கிழப் பையலுக்கு இவ்வளவு தைரியமா? நான் அவன் சொல்வதைக் கேட்க மாட்டேன். அவன் என்னை என்ன செய்ய முடியும்? அவன் இன்றைக்கோ நாளைக்கோ சாகப் போகிறான். அதன் பிறகு சொத்தெல்லாம் யாருடையது? அவன் தயவும் வேண்டாம். பிரியமும் வேண்டாம். அவன் சொற்படியும் நான் இனி நடக்கமாட்டேன்” என்று கூறிய வண்ணம் கடிதத்தை மானேஜரது முகத்தில் வீசி அடித்துவிட்டுத் திரும்பிப் போய் விட்டான். அவன் சொன்ன மறுமொழியை ஒரு வார்த்தை விடாமல் மானேஜர் அப்படியே பெரிய ஜெமீந்தாருக்கு எழுதி விட்டார். அதைக் கேட்ட உடனே கிழவருக்குச் சகிக்க முடியாத கோபம் உண்டானதன்றி, அந்த விசுவாச காதகனுக்குச் செய்த தெல்லாம் வீணாயிற்றே என்ற நினைவினால் மனம் உடைந்த வராய் அவர் கரைகடந்த விசனத்தில் ஆழ்ந்தார்; எவ்வளவோ மேன்மையான சமஸ்தானம் அப்படிப்பட்ட அயோக்கியனுக்குப் போய்ச் சேருவதைப் பற்றி மிகுந்த சங்கடம் அடைந்து ஒரு வாரம் இரவு பகல் அதே நினைவாக இருந்து கடைசியாக ஒரு முடிவிற்கு வந்தார்; தாம் உடனே ஒரு பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டியதே தக்க காரியம் என்று தீர்மானித்தார்; அவருக்கு அப்போது வயது ஐம்பத்தைந்து ஆனதால், தமக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/61&oldid=649955" இலிருந்து மீள்விக்கப்பட்டது