பக்கம்:மதன கல்யாணி-1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 மதன கல்யாணி

தக்க இடத்தில் பெண் கிடைக்காதென்பதை உணர்ந்தார். ஆதலால் ஒர் ஏழையின் வீட்டிலே தான் பெண் பார்க்க வேண்டும் என்று நினைத்து, தமது துரபந்துவான ஒரு சிறிய மிராசுதாரை வரவழைத் தார். அவருக்குக் கல்யாணி என்று பெயர் கொண்ட மகா ரூபலா வண்ணியம் பொருந்திய ஒரு பெண் இருந்தாள். அப்போது அவளுக்கு வயது பதினான்காகி இருந்தது. அந்தப் பெண்ணைத் தமக்குக் கொடுக்கும்படி கேட்க, நித்திய தரித்திரனான அந்த மனிதன் உடனே இணங்கிவிட்டான். பெண்ணும் நன்றாகப் படித்த புத்திசாலி; மகா அற்புதமான அழகு வாய்ந்தவள். அவ்வளவு பெருத்த சமஸ்தானத்திற் கெல்லாம் தான் எஜமாட்டி யாகப் போவதைக் கருதினாளே அன்றி, புருஷன் கிழவன் என்பதை நினையாமல் அவளும் முழுமனதோடு அதற்கு இணங்கினாள். ஒரு வாரத்திற்குள் கலியாணமும் முடிந்து, சோபனமும் நிறைவேறியது. யெளவன மங்கையான கலியாணி யும் வயோதிகரான ஜெமீந்தாரும் ஒன்றுகூடி இரண்டுடலும் ஒருயிரும் போல அந்தரங்கமான காதலோடு இல்லறம் நடத்த லாயினர். எவருக்கும் கிடைக்காத உன்னத பதவியும் ஒப்பற்ற பெருத்த செல்வமும் தனக்குக் கிடைத்ததினால் உண்டான உற்சாகத்திலும் குதுகலத்திலும் கல்யாணி தனது கணவன் வயதானவன் என்பதையே நினையாதவளாய், தன்னை அவ்வளவு பெருத்த செல்வாக்கில் வைத்து உண்மையான வாத்சல்யத்தைச் சொரிந்த அந்த மனிதரிடம் உண்மையான விசுவாசமும் நன்றியறி தலும் காட்டி நிரம்பவும் பயபக்தியோடு நடந்து வந்தாள். யெள வனப் புருஷனிடத்தில் அடையக்கூடிய சுகம் தனக்கு இல்லையே என்ற நினைவாகிலும் ஏக்கமாகிலும் அவளுக்கு உண்டாக வில்லை. மற்ற எல்லா விஷயங்களிலும் ஏற்பட்ட பெருமை யினாலும், சுகபோகங்களினாலும் அவள் முற்றிலும் திருப்தி அடைந்தவளாய் பர்த்தாவுக்கேற்ற பதிவிரதையாக ஒழுகி வந்தாள். அவர்கள் இவ்வாறு கூகித்திருக்கையில், கிழவர் கலியாணம் செய்து கொண்ட சங்கதி அவரது தம்பி மகனான சின்ன துரைக்கு எட்டியது. அவன் அதைச் சிறிதும் இலட்சியம் செய்யாமல், “சாகப் போகிற கிழவனுக்கு இனிமேல் ஆண்பிள்ளை பிறக்கப் போகிறதோ என்று புரளி செய்தவனாய், கிழவருக்கு அவ்வளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/62&oldid=649957" இலிருந்து மீள்விக்கப்பட்டது