பக்கம்:மதன கல்யாணி-1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மதன கல்யாணி

கோபம் பிறந்தது. தான் புறப்படப் போகும் நல்ல சமயத்தில் தனது தாய் எதற்காக அழைக்க வேண்டும் என்ற நினைவும் ஆத்திரமும் உண்டாயின. அவன் உடனே எழுந்து தனது தாயின் அந்தப் புரத்தை நாடிச் சென்றான்.

மாரமங்கலம் ஜெமீந்தாரிணியான கல்யாணி அம்மாளுக்கு அப்போது முப்பத்து மூன்று வயது நிறைந்தது. அவள் மகா கம்பீரமான அழகு வாய்ந்தவள் என்பது முன்னரே குறிக்கப்பட்டு இருக்கிறது. எவருக்கும் கிடைக்காத சுகபோகங்களிலும் அபரிமித மான செல்வத்திலும் தானே ஏக சக்கராதிபதியாக இருந்து, தேகத்தைப் பாதுகாத்துக் கொண்டவள் ஆதலால், அவளது அழகு அமோகமாகப் பெருகி அவள் பூலோக சக்ரவர்த்தினியோ அல்லது இந்திராணியோ என்று எல்லோரும் திகைக்கும்படி ஜெகஜ் ஜோதியாக விளங்கினாள் சாமர்த்தியமாகவும் சாதுரியமாகவும் பேசும் வாக்குவன்மையும், எல்லோரையும் அடக்கியாளும் மேம்பாடும் திறமையும் பெற்றவளாய், அவளைக் கண்ட யாவரும் பயபக்தியும், மதிப்பும் கொள்ளும்படியாக இருந்தனள். அவள் இளமைப் பருவத்திலேயே நிலைமை அடைந்தவள் ஆதலால், அவளது பாலியமும் உன்னத வனப்பும், சிதறிச் சீர்குலைந்து போகாமல், மெருகேற்றிய சுவர்ணம் போலவும், பட்டை தீர்த்த வைரம் போலவும் ஆயிரம் மடங்கு ஒளி பெற்றிருந்தன. வயதேறுவதனால், சிலருக்கு உண்டாகும் தசைப் பற்றைப் போல அவளுக்கு எவ்வித இழுக்கும் ஏற்படாமல், அவள் யெளவனப் பருவத்தில் இருந்ததைவிட அப்போதே மிக்க வசீகரத் தோற்றம் உடையவளாகத் தோன்றினாள். காண்போர், அவளுக்கு இருபது வயதே இருக்கும் என்று மதித்தனரன்றி, முப்பத்து மூன்று வயதடைந்தவளாக அவளை எவரும் சொல்லத் துணியவில்லை.

அவள் பாலியப் பருவத்தினள் ஆதலால் சகலமான ஆபரணங் களையும் அணிந்திருந்தாள். மைனர் அழைக்கப்பட்ட அந்த தினம் அவள் முற்றிலும் கருப்புப்பட்டில் ஜரிகைக்கரையுள்ள பகட்டான ஒரு சேலை அணிந்திருந்தாள். தந்தம் போலப் பளப்பளப்பாக இருந்த அவளது மேனிக்குக் கருப்புப் பட்டாடை நன்றாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/70&oldid=649975" இலிருந்து மீள்விக்கப்பட்டது