பக்கம்:மதன கல்யாணி-1.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 53

பொருந்தி அவளது அழகை நிரம்பவும் சோபிக்கச் செய்தது. சாய்வான நாற்காலி போலிருந்த ஒரு சோபாவில் அவள் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அந்த அந்தப்புரத்தில் எங்கும் படங்களும் நிலைக் கண்ணாடிகளும், லஸ்டர்களும், சோபாக் களும், பூத்தொட்டிகளும், ஜாலர் வைத்த தொங்கல்களும் நிறைந்து நாடகக் காட்சி போல அமைந்திருந்தன. அவள் சந்தோஷமற்ற வதனத்தோடு உட்கார்ந்திருந்ததைக் கண்ட மைனருக்கு ஒரு வகையான அச்சம் தோன்றியது. அவன் தன்னை எதற்காகவோ கண்டிக்கப் போகிறாள் என்பதை அவன் உணர்ந்து கொண்டான். என்றாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், அவன் தனது தாய்க்கு முற்றிலும் அடங்கியவன் அல்ல என்பது தோன்ற உள்ளே நுழைந்து அவளுக்கு நெடுந்துரத்திற்கு அப்பால் எங்கேயோ ஒரு மூலையில் கிடந்த ஒரு சோடாவில் உட்கார்ந்து தனது தாயின் பக்கம் காலை நீட்டி உட்கார்ந்து இன்னொரு திக்கில் இருந்த படத்தைப் பார்த்த வண்ணம், “இம்; சரி, எனக்கு அவசரமாய்ப் போக வேண்டும். கூப்பிட்ட காரியம் என்ன” என்று

அலட்சியமாகக் கேட்டான்.

அதைக் கண்ட கல்யாணியம்மாள் கோபமும், அன்பும் காட்டிய முகத்தோடு, தம்பி! நீ பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொண்ட மரியாதை இதுதானா? நான் கூப்பிட்டால் நீ ஒரு காத தூரத்துக்கு அப்பால் போய் ஒரு மூலையில் உட்கார்ந்து பாட்டியைப் போலக் காலை நீட்டிக் கொண்டு படத்தோடு பேசுகிறாயே? மற்ற எல்லா வரம்பையும் மீறி நடந்தாலும், மூத்தோர் கூப்பிட்டால், அவர்களுக் கருகில் போய், நின்றோ அல்லது உட்கார்ந்தோ, மரியாதையாக சம்பாஷிக்க வேண்டும் என்பதைக் கூடவா அநாவசியம் என்று தள்ளிவிடுகிறது. தம்பீ இப்படிப்பட்ட கேவலமான நடத்தையை யாரிடத்தில் பழகிக் கொண்டாய்? இனியாவது இதை விட்டுவிடு, பெரிய இடத்துப் பிள்ளைக்குத் தகுந்தபடி நடக்கக் கற்றுக்கொள்” என்றாள்.

அதைக் கேட்டவுடன் கோபத்தினால் மைனரது முகம் மாறிக் கருத்தது. அவன் “ஒகோ மரியாதை இல்லாமல்தான், கூப்பிட்ட உடனே ஒடி வந்தேனோ என்னைக் கண்டவுடன் ஏதாவது ஷராச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/71&oldid=649976" இலிருந்து மீள்விக்கப்பட்டது