பக்கம்:மதன கல்யாணி-1.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 - மதன கல்யாணி

சொல்லி அதட்ட வேண்டியது. அதுதான் பெரிய எஜமானருக்குப் பெருமை போலிருக்கிறது” என்று குத்தலாக மொழிந்தான்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாள் மிகுந்த கோபத்தோடு உருட்டி விழித்து கம்பீரமாக நிமிர்ந்து உட்கார்ந்து, “புதிது புதிதான வார்த்தைகளை எல்லாம் சொல்லுகிறாயே! என்ன துர்ப்புத்தி இது யாருடைய சகவாசதோஷம்? தம்பி வேண்டாம், இப்படி நடந்து கொள்வதனால் பெருமை வந்துவிடும் என்று நினைக்காதே; நீ உன் தாயினிடம் இப்படி நடந்து கொள்வதை யாராவது கண்டால் ஏளனம் செய்து சிரிப்பார்கள். அறியாத பையன் என்று நான் கொஞ்சம் பொறுத்துக் கொண்டால், தலைகால் தெரியாமல் உளறுகிறாயே!” என்று கடிந்து கூறினாள். அதைக் கேட்ட மைனர், புரளியாக “அம்மா ஏழை மேலே இவ்வளவு கோபம் என்ன” என்றான்.

கல்யாணி:- போதும் பிரசங்கம்; நிறுத்து. நீ மகா புத்திமான் என்றே நினைத்துக் கொள்ளுகிறேன். நீ இந்த ஆறுமாச காலமாகக் கெட்டு அலைகிறதைப் பார்த்து ஊரெல்லாம் சிரிக்கிறது. அதைக் கேட்கக் கேட்க எனக்குச் சகிக்க முடியாத தலைகுனிவாக இருக்கிறது.

மைனர்:- இந்தப் பழைய புராணத்தை ஒதத்தானா என்னை அழைத்தது? இதற்கு முன் இதை ஆயிரம் தரம் சொல்லியாய் விட்டது. இது ஆயிரத்து ஓராம் தரம்.

கல்யாணி:- (கோபமாக) என்ன துர்ப்புத்தி எவ்வளவு துடுக்கு! ஏதேது இப்போதே இப்படி இருக்கிறதே! நீ எல்லாவற்றிற்கும் எஜமானாகி விட்டால், கையால் பிடிக்க முடியாது போலிருக் கிறதே மேஜர் ஆக இன்னம் ஒரு வருஷத்துக்கு மேலிருக்கிறது. அதற்குள் உன்னை நல்ல வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்று நானும், வக்கீல்கள் இரண்டு பேரும் நினைத்து எவ்வளவோ பாடுபடுகிறோம். நான் உன்னிடம் நயமாகவும் பயமாகவும் கிளிப் பிள்ளைக்குச் சொல்வது போல எவ்வளவோ புத்தி சொல்லியாய் விட்டது. நீ ராத்திரி பகலாய் வீட்டுக்கே வராமல் திரிகிறாய்! பணத்தை எல்லாம் வாரி இறைத்துவிட்டு வருகிறாய். எப்போதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/72&oldid=649978" இலிருந்து மீள்விக்கப்பட்டது