பக்கம்:மதன கல்யாணி-1.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 55

கெட்ட சகவாசமே செய்கிறாய். நீ எப்போதும் இப்படித்தான் செய்யப் போகிறாயா? அல்லது திருந்தப் போகிறாயா? ஒன்றும் விளங்கவில்லையே!

மைனர்:- நான் எப்போதும் துரைராஜாவோடு தானே இருக்கிறேன். அவனுடைய சகவாசம் கெட்ட சகவாசமானால் அவனுடைய தங்கை கண்மணியை எனக்குக் கலியாணம் செய்து வைக்க ஏன் ஏற்பாடு செய்ய வேண்டும்?

கல்யாணி:- ஆகா! நீ பேசுகிறது எவ்வளவு அழகாய் இருக்கிறது! கண்மணியும் அவனும் தவறுதலாக ஒரு வயிற்றில் வந்து பிறந்து விட்டார்கள். மகா உத்தமி என்றாலும் அந்தக் குழந்தைக்கே தகும். எவருக்கும் கிடைக்காத மாசற்ற மாணிக்கம் அல்லவா கண்மணி. அவள் மேலான குணங்களும் நல்ல நடத்தையும் உடைய பத்தரை மாற்றுத் தங்கம். அவனோ சுத்த அயோக்கியன், குடியன், சூதாடி, தாசிவிடே கதியாய்க் கிடக்கும் மதிகேடன், அவனுடைய உண்மை யான யோக்கியதை இன்னதென்பதை கண்மணி இன்னமும் அறிந்து கொள்ளவில்லை; அவன் விளையாட்டுப் புத்தி உடையவன் என்று மாத்திரம் நினைத்துக் கொண்டிருக்கிறாள். உண்மையில் அவனுடைய குணம் எனக்கே தெரியாமல் போய் விட்டது. தெரிந்திருந்தால், மீனாகூஜியம்மாளுக்கு நான் வாக்குக் கொடுத்திருக்கவே மாட்டேன். சொன்ன சொல்லுக்கு விரோதமாக இப்போது செய்ய எனக்கு மனமில்லை - என்றாள்.

மைனர்:- அப்படியானால், அந்தப் பேச்சையே எடுப்பதில் என்ன உபயோகம்? எனக்கு அவசரமாக ஒர் இடத்திற்குப் போக வேண்டும். கூப்பிட்ட காரியம் ஒன்றும் இல்லை போலிருக்கிறது. நான் போகலாம் அல்லவா? - என்றான்.

கல்யாணி:- (கோபத்தோடு) ஒகோ அவசரமாய்ப் போக வேண்டுமோ! சரிதான். கண்மணி நல்ல தங்கமான பெண். இந்தத் துர்நடத்தை எல்லாம் அவளுக்குக் கொஞ்சமாவது பிடிக்காது. அவள் நிரம்பவும் அழகாயும் நற்குணவதியாயும் இருக்கிறாள் என்று நீ ஆசைப்பட்டதால், நான் இதை முடித்தேன். நீ கெட்டலைவது அவளுக்குத் தெரிந்தால், அவள் உன்னைக் கலியாணம் செய்து கொள்ள மாட்டாள். நீ மோசம் போகிறவன்

தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/73&oldid=649982" இலிருந்து மீள்விக்கப்பட்டது