பக்கம்:மதன கல்யாணி-1.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 59

எல்லாம், குழந்தையைத் தேடாமலும், திரும்பவும் அது அகப் பட்டால், அதை அழைத்து வராமலும் தள்ளி விடுவார்களோ - என்று சிறிதும் நன்றி அறிவென்பதே இல்லாமல் கூறினான்; அவனது ஈவிரக்கமற்ற கொடிய சொற்களைக் கேட்டவுடனே கல்யாணியம்மாளது மனம் பொங்கி எழுந்தது, கண்களில் கண்ணி கலகலவென்று உதிர்ந்தது. சொற்கள் தொண்டையில் இருந்து வெளியில் வரமாட்டாமல் அடைபட்டுப் போயின. கல்யாணியம்மாள் தனது சேலைத் தலைப்பை முகத்தில் மறைத்துக் கொண்டு இரண்டொரு நிமிஷம் கோவெனக் கதறி அழுதவுடன், கண்களைத் துடைத்துக் கொண்டு, திரும்பவும் அவனைப் பார்த்து, “நல்லதப்பா உன் இஷ்டம் போலச் செய். ஏதோ அவசரம் என்றாயே, போய் அதைப் பார். இனிமேல் நான் உன்னை அழப்பதும் இல்லை, உன்னிடம் நயமாகக் கேட்பதும் இல்லை. என்னுடைய அதிகாரத்தை எப்படிச் செலுத்த வேண்டுமோ அப்படிச் செலுத்துகிறேன்” என்று உறுதியாகக் கூறினாள்.

மைனர். சரி; இனி மல்யுத்தந்தான். யார் கட்சி ஜெயிக்கிறது என்பதைப் பார்க்கலாம் - என்று இறுமாப்போடு கூறிவிட்டு, முறுக்காக எழுந்து வாசற்படியண்டை போய், மூடப்பட்டிருந்த கதவை ஆத்திரத்தோடு காலால் உதைத்துத் தள்ளி திறந்து அப்பால் போய் திரும்பவும் கதவைப் படேரென்று மூடிக்கொண்டு போய்விட்டான்.

அதைக் கவனித்துக் கொண்டே இருந்த கல்யாணியம்மாளுக்கு ரெளத்திராகாரமான கோபம் பொங்கி எழுந்தது; அவள் விறைப் பாகத் திரும்பிக் கதவைப் பார்த்தாள். கண்களில் தீப்பொறி பறந்தது; “ஆ! விஷப்பாம்பே! என் மார்பின்மேல் வளர்ந்து என்னையே கடிக்கிறாய் அல்லவா! சே! நீ மகா பாதகன் உன் முகத்தில் விழித்தாலும் பாவம் சம்பவிக்கும். உன்னுடைய ஜாதிப் புத்தி எங்கே போகும்” என்று அவள் வாய்விட்டு வைது பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டாள். அந்தச் சமயத்தில் தனக்கு மிகவும் சமீபத்தில் யாரோ மனிதர் கொசகொசவென்று ரகசிய மாகப் பேசிக் கொண்ட ஒசையைக் கேட்டு மான் போல மருண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/77&oldid=649989" இலிருந்து மீள்விக்கப்பட்டது