பக்கம்:மதன கல்யாணி-1.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மதன கல்யாணி

திடுக்கிட்டு நிமிர்ந்து நாற்புறங்களையும் திரும்பிப் பார்த்தாள்; அந்த அந்தப்புரத்திற்கு இரண்டு வாசல்களும் கதவுகளும் இருந்தன. மைனர் சற்று முன் சென்ற கதவிற்கு எதிரில் இருந்த இன்னொரு கதவிற்கு வெளிப்புறத்தில் அந்த ஒசை கேட்டதாக உணர்ந்த கல்யாணியம்மாள் விசையாக எழுந்து போய் அந்தக் கதவைத் திறந்து பார்க்க, அவளது புதல்வியர் இருவரும் கதவிற்கு அப்புறத்தில் ஒளிந்து நின்றதைக் கண்டாள்.

மூத்தவளானதுரைஸானியம்மாளுக்குப் பதினைந்தரை வயதும், இளையவளான கோமளவல்லியம்மாளுக்குப் பதினான்கு வயதும் நிறைந்திருந்தது. இருவரும் ஒரே அச்சில் வார்க்கப்பட்டவர்கள் போல, தாயின் வடிவத்தை பும் வனப்பையும் கொண்டு இரண்டு சுவர்க்கலோகங்கள் ஜதையாகக் காணப்படுவது போல வந்து நின்றனர். ஆனால் துரைஸாணியின் முகத்தில் உன்னதமான தோற்றமும் அமர்த்தலான பார்வையும் தாயினுடைய முகத்தைப் போன்ற செருக்கிய கம்பீரமான நிமிர்வும் காணப்பட்டன. ஆனால் இளையவளிடத்தில் பெண் தன்மையும் அதிகமான கவர்ச்சியும் ஒரு வகையான இளக்கமும் அடக்கவொடுக்கமும் நற்குண நல்லொழுக்கமும் தெள்ளிதில் விளங்கின. இருவரது அழகும் சாமுத்ரிகா லக்ஷணத்திற்கு ஒரு சிறிதும் பழுதின்றி ஒழுங்காக அமைந்திருந்தது ஆனாலும் மூத்தவளது தேகம் திமிரையும் பக்குவ காலத்து முறுக்கையும் காட்டியது. சிறியவளது தேகம்ோ மிருதுத் தன்மையையும் உத்தம ஜாதி அமைப்பும் பெற்று விளங்கியது. துரைஸானியம்மாள் பூலோகத்து சக்கரவர்த்தினி போல இருந்தாள். கோமளவல்லியம்மாளோ வானுலகத்து தெய்வ கன்னிகை போல இருந்தாள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த மடந்தையர் இருவரும் கதவின் மறைவில் ஒளிந்து நின்றதைக் கண்ட கல்யாணியம்மாள் அருவருப்போடு பார்த்து, “துரைஸானியம்மா! என்ன காரியம் இது? தாய்க்குக் கீழ்ப்படியாமல் எதிர்த்து வாதாடும் பிள்ளை ஒருவன் எனக்கிருப்பது போதாதா? தாய் என்ன செய்கிறாள் என்று ஒளிந்து பார்க்கும் ரகசியப் போலீஸ்காரர்களான இரண்டு பெண்களையுமா நான் பார்க்கிறேன்?” என்று கடிந்து கூறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/78&oldid=649991" இலிருந்து மீள்விக்கப்பட்டது