பக்கம்:மதன கல்யாணி-1.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 மதன கல்யாணி

அன்றி நாங்கள் வேண்டும் என்று கெட்ட எண்ணத்தோடு செய்த தல்ல” என்று அன்பாகக் கூறினாள்.

“அப்படியானால் உங்கள் அண்ணன் என்னை அவமதித்ததை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தீர்கள் அல்லவா?” என்றாள்.

கோமளவல்லி அச்சமுற்றவளாய், “எல்லாம் காதில் விழவில்லை. நீங்கள் கேட்டதற்கு அண்ணன் சரியான மறுமொழி சொல்லாமல் மரியாதைக் குறைவாகப் பேசினது மாத்திரம் தெரிந்தது. அதைக் கேட்டவுடனே, எங்களுக்கு உடம்பு கிடுகிடென்று நடுங்கிப் போய் துக்கமும் அழுகையும் வந்துவிட்டன. சகிக்க முடியாத சங்கடப்பட்டுக் கொண்டிருந்தோம். அப்போதே நீங்கள் கதவைத் திறந்தீர்கள். அவ்வளவே நடந்தது” என்று துன்பகரமான குரலில் கூறினாள்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாள் தனது மூத்த குமாரியை அன்பாகப் பார்த்து, “துரைஸானியம்மா! இப்படி வா! ஜன்ன லண்டை போய் எதையோ கவனித்துக் கொண்டிருக்கிறாயே! நாங்கள் இங்கே பேசுவதில் உனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்று நினைத்துக் கொண்டாயா? வா இப்படி” என்று அழைத்தாள். அதைக் கேட்ட துரைஸானி, “குற்றமில்லாத அற்ப சங்கதிகளுக் கெல்லாம் கோபித்துக் கொண்டால், எனக்குச் சகிக்க முடியவில்லை; நான் ஒதுங்கி விட்டேன்” என்று கூறிக்கொண்டே தாயிடம் திரும்பி வந்தாள். மைனரைப் போல அவள் முற்றிலும் பயமற்றவளாய்ப் போகாமல் தாயிடம் இன்னமும் சிறிது மரியாதையும் பயமும் உடையவளாக இருந்தமையால், தாய் அழைத்தவுடன் வந்து விட்டாள். என்றாலும் கல்யாணியம்மாள் தனது முகத்தைச் சுளித்துக் கொண்டு, “ஆகா! கீழ்ப்படியாத பிள்ளைகளைப் பெறுவதைவிட அதிகமான துர்ப்பாக்கியம் உலகத்தில் வேறே எதுவுமில்லை” என்று விரக்தியோடு கூறித் தனது இளைய குமாரத்தியை வாத்சல்யத்தோடு பார்த்து, அவளது சிரத்தில் நிமிர்ந்திருந்த உரோமத்தைத் தடவி கொடுத்து,"செய்தது தவறென்று நீயாவது விசனப்படுகிறாய். தாயார் என்கிற மரியாதையை நீ கொஞ்சம் வைத்துக் கொண்டிருக்கிறாய். துரைஸானி, அவளுடைய அண்ணனைப் போலவே ஆங்காரங் கொண்டவளாக இருக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/80&oldid=649998" இலிருந்து மீள்விக்கப்பட்டது