பக்கம்:மதன கல்யாணி-1.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 63

அவன் தான் ஆண்பிள்ளை; துஷ்ட சகவாசத்தினால் கெட்டு அப்படி நடக்கிறான் என்றால், தாய்க்கு அடங்கி இருக்க வேண்டிய பெண் இம்மாதிரி அடங்காமல் இருப்பது, பின்னால் கஷ்டத்தைத் தான் விளைவிக்கும்” என்றாள். அதைக் கேட்டு துரைஸானி தாயை முறைத்துப் பார்த்து விட்டு அப்பால் திரும்பி கொண்டாள். அந்தச் சமயத்தில் அறைக்கு வெளியில் ஒரு பெருத்த கூக்குரல் உண்டாயிற்று.

அதில் முக்கியமாக ஒரு பெண் பிள்ளையின் குரலே கேட்டது. அடுத்த நிமிஷம் அந்த ஸ்திரீ தலைவிரி கோலமாக உள்ளே நுழைந்து கல்யாணியம்மாளுக்கு அருகில் நெருங்கி ஆத்திரத்தோடு கைகளை நீட்டி நீட்டிக் கூச்சலிட்டு, “இன்னெயோடே ஒண்ணு ரண்டு தெரிஞ்சு போவனும், கெடக்கு கெடக்குன்னு பாத்தா, அந்தக் காலாடிப் பையன் தலைமேலே ஏர்றான். நேத்துப் பையனுக்கு இம்பிட்டுக் குறும்பா என்னெக் கண்டா அவனுக்கு எப்ப பாத்தாலும் எளக்காரமாப் போச்சே! அந்தத் தறுதெலப் பையனை நீங்க கண்டிச்சா ஆச்சு இல்லாமெப் போனா, நான் இனிமேலே சொம்மா இருக்க மாட்டேன். அம்மா! இத்தென நாளா ஒங்க மொவதாச்சனைக்காவப் பார்த்தேன்’ என்று தைதாவென எண்ணெயில் அப்பம் குதிப்பது போல நாட்டியமாடிக் கூக்குரல் செய்தாள். .

தனது தலைமை வேலைக்காரி அவ்வாறு தாறுமாறாகப் பேசிக் கொண்டு வந்ததைக் கண்ட கல்யாணியம்மாள் அவளுக்கருகில் நெருங்கி “பொன்னம்மா! என்ன பைத்தியம் இது? ஏன் இப்படிக் கூச்சல் போடுகிறாய்? நிதானமாகப் பேசு என்ன நடந்ததென்று சொன்னால் அதற்குத் தக்கபடி நான் கண்டிக்கிறேன்; பதறாதே” என்று சாந்தமாகவும் அழுத்தமாகவும் கூறினாள்.

பொன்னம்மாள் முன்னிலும் அதிக ஆத்திரமாக, “ஒரு நாளா ரெண்டு நாளா! பாக்கற போதெல்லாம் திட்டறான். நான் இந்த அரமனேலே ரொம்பகாலமா இருக்கறேனாம்; பளய பெருச்சாளி . யாம். சடாயுவாம். கெயக்கொரங்காம். நீங்க எம்மேலே பிரியமா இருக்கிறீங்களாம்; அதுக்காவ, நான் துர்மந்திரியாம்; ஒரு நாளெக்கி மென்னுலே அடிவச்சு மிதிச்சுடப் போறானாம். நாம் பாட்டுலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/81&oldid=650000" இலிருந்து மீள்விக்கப்பட்டது