பக்கம்:மதன கல்யாணி-1.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 மதன கல்யாணி

இப்ப ஒரு மூலையிலே படுத்திருந்தா, வழியோட போன நாயி என் தலெ மேலே ஒதெச்சூட்டுப் போறானே எம்பிட்டுத் துணிச்சங் கறேன்.”

அதைக் கேட்ட கல்யாணியம்மாள் மிகவும் தத்தளித்தவளாய் “பொன்னம்மா! பொன்னம்மா! அதிகப் பேச்சுப் பேசாதே. நான் கண்டிக்கிறேன். நாளைக்கு சமஸ்தானாதியாகப் போகும் தம்பியை நீ இப்படி இழிவாகப் பேசினால், மற்றவருக்கு இளப்பமாகப் போய்விடும். பேசாமல், நீ போய்ப் படுத்துக் கொள். நான் விசாரிக்கிறேன்” என்றாள்.

கேவலமான அந்தச் சிப்பந்தி தனது அண்ணனை அவ்வளவு இழிவாகப் பேசியதைக் கண்ட துரைஸானியம்மாளுக்குப் பெருத்த கோபம் பொங்கி எழுந்தது. அவள் வேலைக்காரியைப் பார்த்து, “அடி பொன்னி உன்னுடைய யோக்கியதை எவ்வளவு! நீ தாறுமாறாகப் பேசுகிறாயா? யாரைப் பேசுகிறோம் என்பது தெரிய வில்லை போலிருக்கிறது? பேசுவதை ஜாக்கிரதையாகப் பேசு: பல்லை உடைத்துவிடச் சொல்லுவேன்” என்று அதட்டிவிட்டு தனது தாயைப் பார்த்து, “அம்மா! கொஞ்ச நேரத்துக்கு முன் மிகவும் அற்பமான ஒரு பிழைக்காக எங்களிடத்தில் மிகவும் கடுமை காட்டிக் கண்டித்த நீங்கள், மகா கேவலமான ஒரு வேலைக்காரி மிகவும் அவமானமாகத் துவிப்பதைப் பொருத்துக் கொண்டிருக் கிறது நிரம்பவும் ஆச்சரியமாக இருக்கிறது!” என்றாள்.

அதைக் கேட்ட பொன்னம்மாள், “ஒகோ! மகா கேவலமான வேலெக்காரியோ என்னெ ஒங்க ஊட்டுப் புழுக்கச்சி இன்னு பாத்தியோ! அவன் ஒரு குறும்பன். நீ அதுக்கு மேலே கிருவம் புடிச்சவ; ஒன்னெ எனக்குத் தெரியுமே” என்றாள்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாள் மிகவும் அதிகாரமான குரலில், “பொன்னம்மா! வாயை மூடு. வரவர உன் புத்தி என்ன இப்படி ஆய்விட்டது. மறுபேச்சுப் பேசாதே. அம்மா துரைஸானி கோமளவல்லி! நீங்கள் உங்களுடைய அந்தப்புரத்துக்குப் போங்கள். பொன்னம்மாளிடத்தில் நான் கொஞ்சம் தனியாய்ப் பேச வேண்டும்” என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/82&oldid=650001" இலிருந்து மீள்விக்கப்பட்டது