பக்கம்:மதன கல்யாணி-1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 65

பொன்னம்மாள், “தனியாப் பேசணுமோ என்னோடே என்ன பேசறது! அவன் பண்ணற அக்கரமத்தெத் தடுக்க வழி செஞ்சதான் ஆவணும். அவனெக்கண்டா எமனெப் போல இருக்குதே. வங்களாவுலே இருக்கிற ஒருத்தராச்சும் அவனே நல்லவன்னு சொல்றாங்களா கெடையாது; பொல்லா துஷ்டன் அப்பா!” என்றாள்.

அதைக் கேட்ட துரைஸானி பொங்கி எழுந்த கோபத்தோடு, “அம்மா காவற்காரனைக் கூப்பிட்டு இவளைக் கழுத்தைப் பிடித்து முதலில் தள்ளச் சொல்லப் போகிறீர்களா இல்லையா?” என்றாள்.

கல்யாணிம்மாள் பெண்களை நோக்கி, “நீங்கள் இருவரும் அந்தப்புரத்துக்குப் போங்கள். மற்றக் காரியம் அப்புறம் ஆகட்டும்” என்று அழுத்தமாக அதட்டிக் கூற, அங்கே நடந்த விபரீத சம்பாஷணையைக் கண்டு அஞ்சி நடுங்கிய கோமளவல்லி விரைவாக அப்பால் போய்விட்டாள். துரைஸானி மிகுந்த அருவருப்போடு பொன்னம்மாளை உருட்டி விழித்துப் பார்த்த வண்ணம் மிகவும் கம்பீரமாக நடந்து, அப்பால் போய் கதவை தடாரென்று சாத்தி தனது அதிருப்தியைக் காட்டிவிட்டு அப்புறம் சென்றாள்.

அதன் பிறகு தனிமையில் இருந்த பொன்னம்மாளை கல்யாணி யம்மாள் சாந்தப்படுத்த ஒரு நாழிகை நேரமாயிற்று. ஜெமீந் தாரிணிக்கும் பொன்னம்மாளுக்கும் அந்தரங்கமான சில விஷயங் களில் சந்பந்தம் உண்டு ஆதலால், ஜெமீந்தாரிணி அவளிடம் நயந்து போக நேர்ந்தது. அவளது தாட்சணியத்துக்காக, பொன்னம்மாள் ஒருவாறு சாந்தம் அடைந்தாள் ஆனாலும் மைனர் தன்னை இழிவாக நடத்தியதைப் பற்றிய ஆத்திரம் அவளது மனதிற்குள் பொங்கிக்கொண்டே இருந்தது.

இங்கு நிலைமை இப்படி இருக்க, சற்று முன் வெளியிற் சென்ற இளங்குமாரிகள் இருவரும் தாயின் அந்தப்புரத்திற்கு அப்பால் ஒவ்வொருவருக்கும் தனியாக அமைக்கப்பட்டிருந்த அந்தப்புரங் களை நோக்கிச் சென்றனர். அவர்கள் சென்ற இடத்திற்கு 50-கஜ தூரத்திற்கு அப்பால் இருந்த ஒர் அறையின் வாசலில் ஒரு யெளவனப் புருஷன் நின்று கொண்டிருந்தான். குமாஸ்தாக்கள் ம.க.i-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/83&oldid=650003" இலிருந்து மீள்விக்கப்பட்டது