பக்கம்:மதன கல்யாணி-1.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 மதன கல்யாணி

யிலும் மேல்மச்சிலும் பையனது தலை இடித்தமையால், அவன் குனிந்து செல்ல நேர்ந்தது. உன்னதமான பங்களாவிலும் அரண் மனையிலும் அலங்காரமான மண்டபங்களிலும் விடுதிகளிலும் இருந்து பழகிய தான் அவ்வாறு ஒரு கேவலமான குடிசைக்குள் நுழைய நேர்ந்ததைப் பற்றி அவன் வெட்கினான். ஆனாலும் வீரியத்தைவிடக் காரியமே பெரிதென்று மதித்து உள்ளே நுழைந் தான். மோகனாங்கியை வெல்லும் காரியம் தன்னால் முடிய வில்லை என்று கருப்பாயி சொல்லி விடுவாளோ என்ற சந்தேகத் தினால் மிகுந்த சஞ்சலத்தோடு வந்த மைனர், அவள் சுமுகமாகத் தன்னை உள்ளே அழைத்துப் போனதிலிருந்து தனக்கு அவள் சந்தோஷ சமாசாரம் சொல்லப் போகிறாள் என்று நினைத்து மன எழுச்சியும் உற்சாகமும் கொண்டவனாய் உள்ளே சென்றான்.

முன்னால் நடந்த கருப்பாயி கூடத்தில் இருந்து காமரா வீட்டில் நுழைந்து, “இப்படி வந்துறுங்க சாமீ” என்று அழைக்க மைனரும் உள்ளே புகுந்தான். அது 10-அடி நீளம் 8-அடி அகலம் உள்ள ஒரு சிறிய அறை. விளக்கெண்ணெய் விளக்கொன்று ஒரு மூலையில் எரிந்து கொண்டிருந்தது. அதன் வாசலிற்கு எதிர்ப் பக்கத்தில் ஒரு மரஜன்னல் வைக்கப்பட்டிருந்தது. சுவர்களிலும் தரையிலும் மேடுகளும் பள்ளங்களும் பாழிகளும் காணப்பட்டன. ஆனாலும் குப்பை செத்தையில்லாமல் அந்த அறை அன்றைக்கே சுத்தமாகப் பெருக்கப்பட்டிருந்தது நன்றாகத் தெரிந்தது. அதற்குள் இருந்த அடுக்குப் பானைகள் துணிக்கொடி தொம்பைக்கூண்டு முத்லியவைகள் யாவும் வேறோர் அறைக்குக் கொண்டு போய் வைக்கப்பட்டன. ஆதலால், அந்த அறையில் எவ்வித சாமானும் காணப்படவில்லை. தரையில் சுவரோரமாக ஒரு கயிற்றுக் கட்டில் மாத்திரம் காணப்பட்டது. அதன் மேல் ஒரு மெத்தையும் தலை யணைகளும் போடப்பட்டிருந்தன. புதிதாக சலவை செய்யப் பட்ட வெள்ளைத் துப்பட்டி ஒன்று மெத்தையின் மேல் விரிக்கப் பட்டிருந்தது. கட்டிலின் அடியில், முகம் சீவப்பட்ட ஐந்தாறு இளநீர்களும் கத்தியும் காணப்பட்டன. ஒரு தட்டில் ஒரு சீப்பு பச்சை வாழைப்பழம், சர்க்கரை, வெற்றிலை, பாக்கு, ஏலக்காய், லவங்கம் முதலிய சாமான்கள் காணப்பட்டன. ஒரு சிறிய வெண்கலச் செம்பில் நன்றாகக் காய்ச்சப்பட்டிருந்த பால வைக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/86&oldid=650011" இலிருந்து மீள்விக்கப்பட்டது