பக்கம்:மதன கல்யாணி-1.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 69

பட்டிருந்தது. சுவர்களில் வாசனை ஊதுவத்திகள் கொளுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆதலால், அறை முழுதும் கமகமவென்ற வாசனை கமழ்ந்து கொண்டிருந்தது. எதிர்பாராத அந்த ஏற்பாடு களை எல்லாம் கண்டவுடன், மைனர் மிகுந்த வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தவனாய், ஒருகால் மோகனாங்கி அவ்விடத் துக்கே வரப் போகிறாளோ என்று ஐயமுற்று சிறிது திகைத்து நின்றான். உடனே கருப்பாயி, “கட்டிலுமேலே குந்துங்க சாமீ! என்ன ரோசனை பண்ணுறிங்க ஒரு சாமானும் பளசில்ல. எல்லாம் புத்த புதுசு. ஒங்கிளுக்காவ இன்னக்கே வாங்கியாந்தது” என்று அன்போடு கூற, மைனரின் அருவருப்பு விலகியது. அவன் கட்டிலில் உட்கார்ந்து கொண்டவனாய், “இதெல்லாம் சரிதான்; காரியம் பழமோ காயோ? அதை முன்னால் சொல். மனசுக்கு நிரம்பவும் ஆவலாக இருக்கிறது” என்றான்.

அதைக் கேட்ட பெண்பிள்ளை, “கருப்பாயி போனா, காயி பிஞ்சு எல்லாம் பளுத்துப் போவாதா, ஒண்னும் ரோசனை பண்ணாதீங்க. காரியம் அநேகமாக இன்னக்கி ராத்திரிக்குள்ளற தீர்ந்து போவும். அப்பாலே ஐயாவும் அம்மாளும் சந்தோசமா இருக்கறபோது என்னெ நெனப்பீங்களா?” என்று பரிகாசமாய்ப் பேச, அதைக் கேட்ட மைனர் கரைகடந்த மகிழ்ச்சியும், மன எழுச்சியும், பதைப்பும் கொண்டவனாய், “சரி; என்ன நடந்தது? விவரமாகச் சொல். என் மனம் தவிக்கிறது” என்று உருக்கமாக நயந்து கேட்க, கருப்பாயி “பகல்லே நீங்க போன அப்பாலே நான் அந்த வங்களாவுக்குள்ளறதந்தரமாய் போயி பேச்சுக் கொடுத்தேன். அந்தப் பெண்ணுக்குத் தாய்க்கிளவி ஒருத்தி இருக்கறா. அவளோட மொள்ள செநேகம் பண்ணி, ஒரு பெரிய மணிசர் ஊட்டுப் புள்ளெ அந்தப் பொண்ணு மேலே ஆசைப்படுதுன்னு சொல்லி, காரியத்தை முடிச்சுக்குடுத்தா, அவளுக்கு அஞ்சு ரூபா குடுக்குறேன்னு சொன்னேன். அந்த ஐயா அந்தப் பொண்ணு எம்பிட்டுப் பணம் ஒனுமின்னு கேட்டாலும் குடுப்பாரு இன்னு சொன்னேன். அவ இன்னக்கே காரியத்தை முடிச்சுத் தாரேன்னு வாக்குக் கொடுத் திருக்கறா. இன்னக்கி நாடவமாம். அந்தப் பொண்ணு எட்டு மணிக்குப் பட்டணம் போயி ஆடிப்புட்டு, ராத்திரி ரெண்டு மணிக்கு வங்களாவுக்கு வருவாளாம்; இந்நேரம் பொண்ணுக்கிட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/87&oldid=650013" இலிருந்து மீள்விக்கப்பட்டது