பக்கம்:மதன கல்யாணி-1.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மதன கல்யாணி

துக்கிக்கினுபோயி அஞ்சு நிமிசத்துலே பொதச்சுடனும். அவன் எங்கே படுத்திருக்கான்? - என்றான்.

கருப்பாயி:- கயித்துக் கட்டுலுமேலே பஞ்சு மெத்தெ போட்டு அதுமேலே படுத்திருக்கான் - என்றாள்.

கட்டையன்:- நல்லதாச்சு வெட்டின பொறவாலே மெத்தெ யோடெ வச்சு சுத்தி அப்பிடியே கயிறு போட்டுக் கட்டிப் பொதச் சுடனும். இல்லாமெப் போனா எடுத்துக்கிட்டுப் போற போது நெத்தம் கித்தம் ஊட்டுக்குள்ளற சிந்தும். அதிலேருந்து அந்தத் தானாக்காரப் பயலுவ கண்டுக்கிடுவானுவ, தெரிஞ்சுச்சா? - என்றான்.

உடனே கருப்பாயி அதை ஆமோதித்தவளாய், அவனை அழைத்துக் கொண்டு தென்னந் தோப்பிற்குள் நுழைந்து, அங்கு முன்னாகவே வைக்கப்பட்டிருந்த மண்வெட்டியைக் காட்ட, கட்டையன் அதை எடுத்துக் கொண்டு அரைக்கால் மயில் தூரத்திற்கு அப்பால் போய், தரையை வெட்டி மாரளது குழி தோண்டி வைத்துவிட்டு, தனது பீச்சாங்கத்தி கட்டைத்தடி ஆகிய இரண்டு ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு கருப்பாயியோடு வந்து வீட்டை அடைந்தான். இருவரும் ஒசையின்றி மெள்ள அடிவைத்து உள்ளே நுழைந்து கூடத்தை அடைந்தனர். இருள் நன்றாக அடர்ந்திருந்தமையால் மைனர் எங்குப் படுத்திருக்கிறான் என்பதை விளக்கின் வெளிச்சத்தினால் பார்த்தால், அவனை வெட்டுவதற்குத் தோதாக இருக்கும் என்று நினைத்த கட்டையன் விளக்கைக் கொளுத்தும்படி கருப்பாயியிடம் காதோடுகூற, வெளிச்சம் அறைக்குள் தெரியாமல், கருப்பாயி தாழ்வாரத்திற்குப் போய் விளக்கை ஏற்றினாள். விளக்கின் முன்புறத்தை கையால் மறைத்துக் கொண்டு உள்ளே நுழையும்படி கட்டையன் கருப்பாயிக்குச் சைகைகாட்ட, அவள் அப்படியே நின்றாள். கையில் இருந்த கத்தி பளபளவென்று மின்ன, கட்டையனும் உள்ளே நுழைந்தான். தூங்கின மனிதன் ஒருகால் விழித்துக் கொண்டாலும், தானிருப்பது தெரியாமல் இருக்க வேண்டும் என்று நினைத்த கட்டையன் கருப்பாயிக்குப் பின்னால் மறைந்து வந்தான். கருப்பாயி நன்றாகக் குறட்டைவிட்டு அயர்ந்து தூங்கிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/90&oldid=650020" இலிருந்து மீள்விக்கப்பட்டது