பக்கம்:மதன கல்யாணி-1.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 73

மைனருக்கருகில் சென்று வெளிச்சத்தைக் காட்ட அந்த மனிதன் எவ்விடத்தில் எப்படிப் படுத்திருக்கிறான் என்று கட்டையன் பார்த்தான். நல்ல உடைகளோடு கடுக்கனும், மோதிரங்களும் தகதகவென்று மின்னப் படுத்திருந்த மைனரைக் கண்டவுடனே அவன் யாரோ பிரபுவின் வீட்டுப் பிள்ளை என்பதை உணர்ந்த கட்டையன், அவன் இன்னான் என்பதை அறிந்து கொண்டால், அது பின்னால் எதற்காயினும் உபயோகமாக இருக்கும் என்று நினைத்து, சிறிது நகர்ந்து முகத்தை நன்றாக உற்று நோக்கினான். நோக்கவே அந்த முகம் அவனுக்கு அறிமுகமானதாகத் தோன்றியது. அவன் இன்னமும் சிறிது நெருங்கிப் பார்த்தான்; உடனே திடுக்கிட்டான். “மாரமங்கலம் மைனரல்லவா” என்ற சொல் அவனது வாயிலிருந்து தானே வந்துவிட்டது. “மாரமங்கலம் மைனர்” என்ற சொல் கருப்பாயியின் காதில் பட்டவுடனே அவளும் திடுக்கிட்டு, “ஆ, மாரமங்கலம் மைனரா? அப்பிடீன்னா வெட்டவானாம்” என்று வாய்விட்டுக் கூறி, கட்டையனது கையைப் பிடித்துக் கொள்ள, அந்தச் சமயத்தில் மைனர் கண்களை விழித்துக் கொண்டான். அதைக்கண்ட கருப்பாயி சடக்கென்று வாயால் ஊதி விளக்கை அவித்துவிட்டாள். எங்கும் இருள் சூழ்ந்து கொண்டது. கருப்பாயி கட்டையனது கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியில் பக்கத்தில் இருந்த தென்னஞ் சோலைக்குப் போய் நின்று, “அப்பா கட்டையா! இவனெ வெட்டவானாம்; நீ போ, நான் நாளெக்கி ராத்திரி ஒங்க ஊருக்கு வந்து பேசிக்கறேன்” என்று நயந்து வேண்டிக்கொள்ள, கட்டை யனுக்கு ரெளத்ராகாரமான கோபம் மீண்டது. “ஓகோ! எங்கிட்டவே கைவரிசெ காமிக்கிறியோ! எல்லாப் பணத்தையும் நீயே நீயே அடிச்சுக்கப் பாக்கிறியோ? அந்தக் குளிலே ஓங்க ரெண்டு பேரையும் சேத்துப் பொதெச்சுடுவேன் பத்திரம்; விடுகையெ; அவனெ வெட்டிப்புட்டுத்தான் மறுவேலை” என்றான் கட்டையன்.

அதைக் கேட்ட கருப்பாயி, “கட்டையா ஆத்தரப்படாதே! ஒனக்குப் பணந்தானே ஒனும்? அவங்கிட்ட இருக்கரத்துலே பாதி அஞ்சாயிரம் ஒனக்குச் சேரவேணும். நாளெக்கிப் பொழுது சாய அந்த அஞ்சாயிரம் ரூபாயெ நான் ஒங்க ஊட்டுலே கொண்டாந்து தாறேன். நீ பேசாமே போ, நான் கொண்டாரமெப் போனா, நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/91&oldid=650021" இலிருந்து மீள்விக்கப்பட்டது