பக்கம்:மதன கல்யாணி-1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 மதன கல்யாணி

என்னக் கொன்னுப்புடு, சம்மதம்” என்றாள். அதைக் கேட்ட கட்டையன், “நீ இன்னக்கே பணத்தைச் சுருட்டிக்கினு ஊரை விட்டு ஓடிப்போனா என்ன செய்யறது” என்றான்.

அவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்க, உட்புறத்தில் விழித்துக் கொண்ட மைனரது நிலைமையை விவரிப்பதை விட யூகித்துக் கொள்வதே சுலபமானது. சமீபத்தில் பேச்சுக்குரல் கேட்டதனால் விழித்துக் கொண்ட மைனர், கையில் விளக்கோடு கருப்பாயி நின்றதையும்; பீச்சாங்கத்தியோடு ராக்ஷசன் போல ஒரு கருத்த ஆள் நின்றதையும் கண்டவுடனே பேரச்சங் கொண்டான்; விளக்கை அணைத்து விட்டு அவர்கள் போனவுடனே எழுந்து உட்கார்ந்தான். கால்களும் கைகளும் வெவெடவென்று ஆடுகின்றன. குலை நடுக்கம் எடுக்கிறது. வியர்வை உடம்பில் இருந்து பொங்கி வழிகிறது. கருப்பாயி தன்னை வஞ்சித்து விட்டாள் என்றும், தான் இனி உயிரோடு தப்ப முடியாது என்றும் நினைத்துக் கதிகலங்கி என்ன செய்வது என்பதை அறியாமல் தவித்தான்; அவ்வளவு தூரம் வந்தவர்கள் விளக்கை அவித்து விட்டுப் போனதன் காரணம் என்னவென்று ஆலோசித்தான்; தான் விழித்துக் கொண்டதனால், அவர்கள் போயிருக்கலாம் என்றும், தான் மறுபடியும் துங்கியவுடனே வருவார்கள் என்றும் நினைத்தான்; வீடு முழுதும் இருள் சூழ்ந்திருந்தது தனக்கு அனுகூலம் என்று நினைத்தான்; அந்த வீட்டின் உட்புறத்தை வெளிச்சத்தில் நன்றாகப் பார்த்தவன் ஆதலால், ஒசையின்றி மெல்ல எழுந்து சுவரோரமாக நெருங்கி நடந்து கூடத்திற்குப் போய், தாழ்வாரத்தின் வழியாக வெளியில் வந்துவிட்டான். அப்போது கட்டையனும் கருப்பாயியும் பக்கத்தில் இருந்த தென்னஞ்சோலையில் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். ஆதலால், அந்தப் பக்கத்தில் மனிதரது பேச்சுக்குரல் சொற்பமாகக் கேட்டது. அவன் அந்தக் கள்வர் இருந்த பக்கத்தில் செல்லாமல், அதற்கு எதிர்ப்புறமாக மெல்ல நடந்து, வயல்களுக்குள் புகுந்து, விரல்களைக் கீழே ஊன்றி, ஒசை செய்யாமல் ஒட்டம் பிடித்தான். உயிர் போகக்கூடிய அந்தக் கொடிய ஆபத்தில் இருந்து தப்பி எப்படி யாகிலும் ஓடிவிட வேண்டும் என்னும் நினைவு அவனை மகா வேகமாகத் தள்ளிது ஆகையால், அவன் வாயுவேக மனோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/92&oldid=650023" இலிருந்து மீள்விக்கப்பட்டது