பக்கம்:மதன கல்யாணி-1.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 75

வேகமாய்ப் பறக்கிறான்; மேடுபள்ளம் புதர் சப்பாத்து பாம்பு என்பதைக்கூட கவனியாமல் தாண்டிக் குதித்துக் கொண்டு, தலை தெறிக்க, குடல் அறுக ஒடுகிறான்; அவர்கள் பின்னால் தொடர்ந்து வருகிறார்களோ என்று இடையிடையே திரும்பிப் பார்க்கிறான். புதர்களில் இருந்த நரி முதலியவை துள்ளிக் குதித்தால், திருடர்கள் தான் துரத்துகிறார்கள் என்று நினைத்து அவனும் துள்ளிக் குதித்தோடுவான். அவ்வாறு கால்மயில் தூரம் ஒட, அவ்விடத்தில் ராஜபாட்டை வந்து குறுக்கிட்டது. வயல்களில் இருந்து போய் ராஜபாட்டையை அடைந்த உடனே, சிறிது துணிவுண்டாயிற்று. தான் ஓடிவந்த திசையை நோக்கி திருடர் தொடர்ந்து வரவில்லை என்று அவன் உணர்ந்தான். என்றாலும், அவர்கள் வீட்டிற்குள் போய், தான் ஒடிவிட்டதைக் கண்டால், எப்படியும் தொடர்ந்து வருவார்கள் என்று நினைத்தவனாய், அவ்விடத்தில் நிற்க மனமற்றவனாய் சைதாப்பேட்டையிருந்த திக்கில் அந்தப் பாதையிலேயே விசையாக நடக்க ஆரம்பித்தான். அப்போது இரவு மணி ஒன்றிருக்கலாம்; இருள் சூழ்ந்திருந்தது ஆனாலும், நக்ஷத்திரங்கள் நன்றாகப் பிரகாசித்தமையால், மரம் என்பதும், பாதை என்பதும், தண்ணிர் என்பதும், மனிதர் என்பதும் தெரியக் கூடிய வெளிச்சம் இருந்தது. பாதையின் இரு புறங்களிலும் பெருத்த மரங்கள் இருந்தமையால், அவைகளில் அவன் அச்சத்தோடு மறைந்து மறைந்து ஒட்டமாக நடக்க ஆரம்பித்தான்.

அவ்வாறு அவன் அரைக்கால் மயில் தூரம் சென்றிருப்பான்; அவனுக்குப் பின்புறத்தில், குதிரையின் காலடி ஓசை தடதட வென்று கேட்டது. அவன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான்; தனக்குப் பின்னால், குதிரை மீது உட்கார்ந்து கொண்டு யாரோ ஒருவர் வந்ததைக் கண்டான். ஒருகால் திருடன் குதிரை மேல் ஏறிக் கொண்டு தன்னைத் துரத்துகிறானோ என்ற அச்சத்தினால் அவனது உயிரில் முக்கால் பாகம் போய்விட்டது. இனி தான் தப்ப முடியாது என்று நம்பிக்கை இழந்தவனாய் அவன் தத்தளித்திருந்த சமயத்தில் அந்தக் குதிரை அவன் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது. அதிலிருந்த மனிதன், மைனரைக் கண்டவுடன் குதிரையை நிறுத்தினான். நடுநடுங்கி நின்ற மைனர், குதிரைமீது வந்தது யார் என்று பார்க்க, அந்த மனிதர் அணிந்திருந்த உடைகளினால் அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/93&oldid=650025" இலிருந்து மீள்விக்கப்பட்டது