பக்கம்:மதன கல்யாணி-1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 8i

விட அச்சப்பட்டுக் கொண்டே போனால், தனது இருப்பிடமாவது அடிேக்கும் என்று நினைத்தவனாய், அவன் வந்த வழியாகவே திரும்பி நடக்கத் தொடங்கினான். வேஷதாரியான திருட்டுப் பெண் காட்டிய பாலத்தின் வழியாகப் போவது அவனுக்கு உசிதமாகத் தோன்றவில்லை. அதுகாறும், அவன் அந்தப் பாதையின் வழியாகச் சென்றவனன்று ஆதலால், அது எங்கு போகுமோ, அதனால் இன்னமும் என்ன தீங்கு சம்பவிக்குமோ என்ற கவலை கொண்ட வனாய், வந்த வழியிலேயே நடக்கலானான். பிள்ளையார் பிடிக்க, அது குரங்காய் முடிந்த கதை போல தான் மோகனாங்கியின் நட்பையும் சிற்றின்ப சுகத்தையும், நாடிவர, தனக்குக் கருப்பாயியின் நட்புண்டானதும், அவளது வீட்டில் இருந்து உயிர் தப்பி ஒட நேர்ந்ததையும், இடையில், வேஷதாரியான ஒரு கொள்ளைக்காரி யிடம் அகப்பட்டு பொருளை எல்லாம் இழந்து நடு இரவில் இருளில் காட்டுப் பாதையில் தனியாக நடந்து செல்ல நேர்ந்ததை யும் நினைத்த மைனர், அந்த வைராக்கியத்தில், இனி மோகனாங்கி யைக் கனவிலும் நினைப்பதில்லை என்று உறுதி செய்து கொண்டவனாய் மேலே நடந்தான். பாதையின் இருபுறங்களிலும் மரங்களும் சப்பாத்துப் புதர்களும் அடர்ந்திருந்தன. இரண்டோர் இடத்தில் பிரமாண்டமான பாம்புகள் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்குப் போனதைக் கண்டு அலறியடித்துக் கொண்டு துள்ளி விழுந்தான். நரிகளும், நிசாசரங்களும் கூக்குர லிட்டு சரசரவென்று ஒசை உண்டாக்கியதைக் காண அவனது பேரச்சமானது உச்சி மயிரைப் பிடித்து உலுக்கியது. அன்று இரவு முற்றிலும் ஏற்பட்ட உழைப்பினால் அவனது தேகம் மிகவும் சோர்வடைந்து போயிருந்தது. கால்கள் நடக்கமாட்டாமல் தள்ளாடின. தூக்கம் இமைகளை மூடின. அத்தகைய பரிதாபகர மான நிலைமையில் ஒரு நாழிகை நேரம் வரையில் மைனர் நடந்து சென்றான். வந்த வழியே சைதாப்பேட்டைக்குப் போய் அவ் விடத்திலிருந்து தேனாம்பேட்டைக்குப் போய்விட உத்தேசித்த வனாய் அவன் நடந்து போய்க் கொண்டிருந்தான். சுமார் மூன்று நான்கு மயில் தூரம் அவன் சென்றிருப்பான். அதுவரையில் எங்கும் வீடே காணப்படவில்லை ஆனாலும், அப்போது பாட்டையின் அருகில் ஒரு பங்களா காணப்பட்டது. அதைக் ம.க.1-7 - ...- . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/99&oldid=650036" இலிருந்து மீள்விக்கப்பட்டது