பக்கம்:மதன கல்யாணி-2.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 மதன கல்யாணி

உட்கார்ந்துகொண்டாள். அவளது மனநிலைமைகள் குடித்த வனது மன நிலைமையைப்போலவும், பைத்தியங்கொண்டவனது மன நிலைமையைப் போலவும், எண்ணிய விஷயத்தைப் பற்றியே திரும் பத் திரும் ப எண்ணிக்கொண்டிருந்தது. பாலாம்பாளது நினைவு உண்டானால் அவளுக்கு ஒரு பெருத்த பூதத்தைக் கண்ணிற்கெதிரில் காண்பதைப்போல இருந்தது. அவளும், சிவஞான முதலியாரும் பாலாம் பாளிடத்தில் சம்பாவித்திருந்த சமயத்தில், மைனரால் எழுதிக் கொடுக்கப்பட்ட பத்திரத்தைத் தாங்கள் ஒப்புக்கொள்வதைப்போல நடித்து, மைனரைத் தப்பவைக்க வேண்டும் என்றும், அவ்வாறு அவன் தப்பி வந்தபிறகு தங்களது முந்தைய ஏற்பாட்டின் படி அவனுக்கும் கண்மணியம்மாளுக்கும் கலியாணம் செய்து வைத்துவிட வேண்டும் என்றும், அதன் பலனாக, கண்மணி யம்மாளுக்கும் பாலாம்பாளுக்கும் பலவிதமான சச்சரவுகள் உண்டாகும் என்றும், கண்மணியம்மாள் துன்பப்பட வேண்டும் என்றும் நினைத்திருந்தாள். ஆனால், அந்த பத்திரத்தில், தாங்களும் கட்டாயமாகக் கையெழுத்திடும்படி நேர்ந்ததும், அதன் பிறகு கண்மணியைக் கலியாணம் செய்து வைத்தால், தாங்கள் பாலாம்பாளுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கும்படி யான நிலைமையில் தாங்கள் இருப்பதும் அவளுக்குச் சகிக்க இயலாத துன்பமாகத் தோன்றியது. தாங்கள் அவளை ஏமாற்ற நினைக்க, அவளே மகா சமர்த்தியமாக ஏமாற்றி, தங்களை அவளுக்குக் கட்டுப்பட்டவர்களாகச் செய்து கொண்டதை நினைத்து நினைத்து நடுநடுங்கினாள். மைனருக்குப்பின், சமஸ்தானத்திற்கு வாரிசாக ஏற்பட, அவன் அக்கினி சாட்சியாகத் தாலி கட்டின மனைவியின் வயிற்றில் ஓர் ஆண் குழந்தை பிறந்தே தீரவேண்டும் என்பதை அவள் அறிவாளாதலால், மைனருக்குத் தாம் எப்படியும் கண்மணியைக் கலியாணம் செய்துவைத்தே தீரவேண்டும் என்றும், அதனால், தங்களுக்கும், பாலாம்பாளுக்கும் எவ்வகையான சச்சரவுகளும், வியாஜ்ஜியங்களும், பொருள் நஷ்டமும் ஏற்பட்டாலும் அவற்றிற்குத் தாம் ஆளாகியே தீரவேண்டும் என்றும் அவள் எண்ணமிடலானாள். அவள் ஒருகால் மைனரைச் சிறைச்சாலையில் இருந்து மீட்பாளோ மீட்கமாட்டாளோ என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/10&oldid=645822" இலிருந்து மீள்விக்கப்பட்டது